பலதரப்பட்ட சதி முயற்சிகளும் முறியடிக்கப்பட்ட நிலையில் ஓட்டமாவடி இடம் பெற்ற NTJ யின் மாநாடு

Written By avathani Media Network on Saturday, March 5, 2016



பலதரப்பட்ட சதி முயற்சிகளும் முறியடிக்கப்பட்ட நிலையில் ஓட்டமாவடி ஷீஆக்களின் மன்பஉல் ஹுதா மத்ரஸாவுக்கு முன்னாலேயே NTJ யின் மாநாடு மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்! 

வல்ல இறைவனின் பேருதவியால் ஓட்டமாவடி ஷீஆக்களின் மன்பஉல் ஹுதா மத்ரஸாவுக்கு முன்னாலேயே கடந்த இரவு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ஷீஆ ஒழிப்பு மாநாட்டை மிகவும் சிறப்பாக நடாத்தியது. 

ஓட்டமாவடி ஷீஆக்களின் பொய்ப்பித்தலாட்டங்கள் எனும் தலைப்பில் மௌலவி M.C.M ஸைனீ (உமரீ) முதலாவது உரை ஆற்றினார். இதையடுத்து “இலங்கை முஸ்லிம்களே! கல்குடா ஷீஆக்களின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளுங்கள்!” எனும் தலைப்பில் மௌலவி M.C.M ஸஹ்றான் (மஸ்ஊதி) இரண்டாவது உரை நிகழ்த்தினார். 

கல்குடா ஷீஆக்களால் வெளியிடப்பட்ட “கண்டறிந்த உண்மைகள்” எனும் புத்தகத்திலுள்ள அபத்தங்கள் மாநாட்டில் அக்குவேறு ஆணிவேராக விபரிக்கப்பட்டதுடன் கல்குடா ஷீஆக்களுக்கு இறுதியில் பகிரங்க விவாத சவாலும் விடுக்கப்பட்டது. ஷீஆக்கள் விவாதத்திற்கு வந்தால் விவாதம் செய்யவும் தயார் வழக்குப் போட்டால் வழக்கை எதிர் கொள்ளவும் தயார் என மேடையிலேயே பகிரங்க அறிவிப்பு செய்யப்பட்டது. 

ஆண்கள் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இம்மாநாட்டில் பங்கேற்று பயனடைந்தனர். ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. 400 க்கும் மேற்பட்ட மக்கள் எமது நேரடி அஞ்சலைப் பார்வையிட்டனர். அல்ஹம்துலில்லாஹ்! இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் ஓட்டமாவடியில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடாத்த ஜமாஅத் உத்தேசித்துள்ளது என்ற தகவலையும் இங்கு அறியத் தருகின்றோம்.











Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.