முன்பள்ளி ஆசிரியைகளின் பிரச்சனைகளுக்கான இடைக்கால தீர்வுகளை NFGG வழங்க முன்வந்துள்ளது.

Written By avathani Media Network on Tuesday, March 15, 2016


(NFGG ஊடகப் பரிவு)



காத்தான்குடி பிரதேச முன்பள்ளி ஆசிரியைகளின் பிரச்சனைகளுக்கான இடைக்கால தீர்வுகளைவழங்கவுள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அறிவித்துள்ளது.

NFGGயின் ஏற்பாட்டில் காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள முன்பள்ளி ஆசிரியைகளுடனான இரண்டாம்கட்ட கலந்துரையாடல் ஒன்று நேற்று (14.03.2016- திங்கட்கிழமை) NFGGயின் காத்தான்குடி பிராந்தியக்காரியாலயத்தில் இடம்பெற்றபோதே இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் NFGGயின்தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான், பிராந்திய செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் ASM ஹில்மி, மற்றும்பிராந்திய சபை உறுப்பினர்கள், NFGGயின் மகளிர் அணி உறுப்பினர்கள், பிரதேச முன்பள்ளி ஆசிரியைகள் உட்படபலரும் கலந்து கொண்டிருந்தனர்.


கடந்த 15.02.16 அன்று முன்பள்ளி ஆசிரியைகளுடன் NFGGயினால் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் இரண்டாம்கட்டமாகவே மேற்படி கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.முன்பள்ளி ஆசிரியைகளுடனானமுதலாம் கட்ட சந்திப்பின் போது ஆசிரியைகள் மற்றும் முன்பள்ளி நிர்வாகிகளினால் முன்பள்ளிப்பாடசாலைகள், ஆசிரியைகள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சனைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.இதன்போது முன்வைக்கப்பட்ட பிரச்சனைகளில் பிரதானமான சில பிரச்சனைகளுக்கு ஒரு மாத காலஇடைவெளியில் இடைக்கால தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவதாக NFGG சார்பில் ஆசிரியைகளுக்கு உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது. 

இதன் அடிப்படையில் ஆசிரியைகளுக்கான இடைக்கால தீர்வுகள் தொடர்பில் தெளிவு படுத்தும் நோக்கிலேயேஇந்த இரண்டாம்கட்ட கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் NFGGயின் தவிசாளர்பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் NFGGயினால் மேற்கொள்ளப்படவுள்ள இடைக்காலத்தீர்வுகள் பற்றியசிறப்புரை ஒன்றினை ஆற்றினார். குறிப்பாக முன்பள்ளி ஆசிரியைகள் பிரதானமாக எதிர்நோக்குகின்ற அவர்களது மாதாந்த சம்பளப்பிரச்சனைகளுக்கான இடைக்கால தீர்வாக ஆசிரியைகளுக்கான மேலதிகஊக்குவிப்புத் தொகையினை வழங்கி வைக்க NFGGதீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும்இரண்டு வாரகாலத்திற்குள் இச்செயற்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும் எனவும் இதற்குமேலதிகமாக ஆசிரியைகளின் தொழில்சார் டிப்ளோமாப் பாடநெறிக்கான சகல வசதிகளையும் NFGG செய்துகொடுப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன் கிழக்கு மாகாண முன்பள்ளிகள்எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரும்நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இது தொடர்பாக சமூகமளித்திருந்த முன்பள்ளி ஆசிரியைகள் கருத்துக்களை தெரிவிக்கையில் இச்செயற்திட்டமானது தங்களை மிகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் ஊக்கமளிப்பதாகவும் அமைந்துள்ளது எனதெரிவித்தனர். இதுவரை காலப்பகுதியில் பதவிகளிலிருந்த பலராலும் கண்டு கொள்ளப்படாத பிரச்சனையாகஇருந்துவந்த முன்பள்ளி ஆசிரியைகளின் பிரச்னையினை தங்களது சொந்தப்பணத்தில் தீர்த்து வைப்பதற்குமுன்வந்த NFGGயின் நேர்மையான சமூகப்பணியினை தாங்கள் உண்மையில் பாராட்டுவதாகவும் தங்களுக்குஅளித்த உறுதிமொழியினை மதித்து ஒரு மாத காலத்திற்குள் எமக்கான இடைக்கால தீர்வுத்திட்டத்தினைமுன்வைத்தமைக்காக தாங்கள் NFGGக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டனர். 

இறுதியில் இச்செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண திகதி ஆசிரியைகளுக்கு இருவார காலத்திற்குள்அறிவிக்கப்படும் எனவும் முன்பள்ளித்துறை எதிர்நோக்குகின்ற ஏனைய பிரச்சனைகளுக்கான நிரந்தரத்தீர்வினை பெற்றுக்கொடுக்க நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தொடர்ந்தும் முயற்சிகளைமேற்கொள்ளும் எனவும் இதன் போது உறுதியளிக்கப்பட்டது. இச்செயற்திட்டத்திற்கு சமாந்தரமாக NFGGயின்தவிசாளர் அப்துர்ரஹ்மான் உட்பட பிராந்திய சபை உறுப்பினர்கள் பலரும் முன்பள்ளிகளை நேரில் சென்றுபார்வையிட்டு முன்பள்ளிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை கண்டறியும் செயற்திட்டம் நடைபெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.








Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.