மறுப்புக் கட்டுரை

Written By avathani Media Network on Tuesday, March 15, 2016

(அப்துல் மஜீட் முஹம்மது பார்சாத்)
மாஜி மனைவியை திட்டமிட்டு கொலை செய்தது மஜீத் ரப்பானியா?
என்ற தலைப்பில் எழுதிய சகோதரர் முஹம்மட் நியாஸ் அவர்களின் கட்டுரைக்கு 
ஒரு மறுப்புக் கட்டுரை.... 

சகோதரர் நியாஸ் மஜீத் ரப்பானியின் முதல் மனைவியின் மரணத்தில் சந்தேகம் 
ஏற்படும் வகையில் கேள்விக்குளியாக ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார்.

அதற்கு புலனாய்வு கட்டுரை என பதிவிட்டிருந்தார். 
ஒலிந்திருக்கும் விடயத்தை வெளிக்கொன்டுவர கட்டாயம் புலனாய்வு கட்டுரைகள்
அவசியம் அதில் மாற்றுகருத்து இல்லை 
மஜீத் ரப்பானியின் முதல் மனைவி சம்பந்தமாக வெளியிடப்பட்ட கட்டுரையில் 
தலைப்பிடப்பட்டது போன்று 
"மாஜி மனைவியை திட்டமிட்டு கொலை செய்தது மஜீத் ரப்பானியா?" 
என்ற விடயம் ஒரு கேள்விக்குறியான விடயமே கிடையாது என அறிய முடிகிறது.. 

மஜீத் ரப்பானியின் முதல்மனைவி பற்றிய தகவல்கள்.... 
பாத்திமா ஜென்ஸா என்ற பெயர் உடைய மஜீத் ரப்பானியின் மனைவி நீண்ட 
நாட்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 19.02.2012 அன்று 
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானார். இது முழு ஊரும் அறிந்த 
உண்மையன அறிய முடிகிரது. 
அப்படியிருக்க சிறுமி பாதிக்கப்பட்ட சம்பவத்துடன் எந்தவித தொடர்புமில்லாத 
அவரது மரணத்தை கொலையாக சித்திரித்துள்ளமை தொடர்பில் மஜீத் மௌலவியின் 
முதலாவது மனைவின் குடும்பத்தினர் கவலைகளை
வெளியிட்டுள்ளனர்.

தனது முதலாவது மனைவி சுகவீனமுற்றிருந்த நிலையில் அவரது சிகிச்சைக்காக 
மஜீத் மௌலவி கொழும்பு மட்டக்களப்பு என பல இடங்களிலும் வைத்தியசாலைகளில் 
அனுமதித்து சிகிச்சைக்கு ஏற்பாடுகளை செய்ததாகவும் அந்த நேரத்தில் தனது 
இரண்டு பிள்ளைகளையும் அவர் நன்றாகவே பராமரித்து வந்ததாகவும் அவர்கள்
தெரிவிக்கின்றனர்...

ஒரு சந்தர்ப்பத்தில் 
அவரது முதல் மனைவி கடும் சுகவீனமுற்றிருந்த போது இரு பிள்ளைகளையும் 
கவனித்ததும் உடுப்புக் கழுவியதும் சாப்பாடு ஊட்டிவிட்டதும் மஜீத் 
மௌலவிதானாம்...

இரண்டாவது திருமணத்தின் பின்னர்தான் அவர் மும்தாஜுக்கு அடிபணிந்து 
நடந்திருக்கிறார் 
எனினும் இரண்டாவது திருமணத்தின் பின்னரே பிள்ளைகள் மீதுகொடுமைகள் 
இடம்பெற்றுள்ளதாகவும் அதற்கு மஜீத் மௌலவியும் துணை போயுள்ளதாகவும்
கூறப்படுகிரது.

ஒரு மனிதன் எப்படிப்பட்ட பாவியாக இருந்தாலும் கேள்விக்குறியுடன் 
கொலைக்குற்றச்சாட்டை முன்வைக்கும் வகையில் நடந்து கொள்வது அளவு கடந்த 
விமர்சனம்களாகும்.

எனவே சகோதரர் நியாஸ் அவர்களின் கட்டுரை நானும் எனது முகப்புத்தகத்தில் பதிவிட்டேன் 
விடயத்தை தெளிவாக ஆராய்ந்த பின்பு அதை நீக்கி விட்டேன்.

மஜீத் ரப்பானியின் விடயத்தில் புலனாய்வு தகவல்களை எடுத்த நியாஸ் முதல் 
மனைவியின் மரணம் சம்பந்தமாக புலனாய்வு செய்திருந்தால் நிச்சயம் அவர்
அவ்வாரான கட்டுரை வெளியிட்டு இருக்க மாட்டார் என நினைக்கிறேன்


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.