(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் மாவத்தை, முகைடீன் மாவத்தை ஆகிய வீதிகளின் புனர்நிர்மானப் பணிகளை ஆரம்பஞ் செய்யும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, வீதி அபிவிருத்திப்பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரேத்தியகச செயலாளர் சட்டத்தரனி.எம்.எம்.சஃபீர், இணைப்பாளர்களான யூ.எல்.எம்.பசீர், எம்.ஏ.தபீக், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் றனூஸ் உள்ளிட்;ட அரசியல் பிரமுகர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலதிக மாகாணப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.நிசார் உள்ளிட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை உயரதிகாரிகள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
கிராமத்திற்கு ஒரு வேலை எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சுமார் 60 மில்லியன் நிதி ஒதுக்கீட்டிலேயே வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான சுமார் 2 கிலோ மீற்றர் வீதி புனர்நிர்மானஞ் செய்யப்படவுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் நன்மையடையவுள்ளதாகவும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் தெரிவித்தார்.