இன்று இந்தியாவில் ஆரம்பமாகிய T20 உலக கிண்ணப் போட்டிகள் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.முதல் கட்டமானது இரண்டாம் நிலை அணிகளுக்கிடையிலான தகுதிச் சுற்றுப் போட்டியாகவும் இரண்டாம் கட்டமானது பிரதான அணிகளை உள்வாங்கியதாகவும் இடம்பெறவுள்ளது.
இதனடிப்படையில் மார்ச்8 இன்று தொடக்கம் மார்ச் 13 ம் திகதி வரை தகுதி கான் சுற்றுப்போட்டி நடைபெறுவதுடன், மார்ச் 15 தொடக்கம் மார்ச் 28 வரை பிரதான சுற்றுப்போட்டி நடைபெறும். அதே போல் மார்ச் 30,31 ம் திகதிகளில் அரையிறுதிப் போட்டிகளும் , ஏப்ரல் 3 ம் திகதி இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளன.
தகுதிச்சுற்றுப் போட்டியானது குழு A,குழு B என்ற அடிப்படையில் இரண்டாம் நிலையிலுள்ள 4அணிகளை ஒவ்வொரு குழுவிலும் உள்ளடக்கியதாக இருக்கும். இதில் A குழுவில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி Q1A எனவும் B குழுவில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி Q1B எனவும் அழைக்கப்படும்.
இவ் இரு அணிகள் மாத்திரமே பிரதான போட்டிகளில் விளையாட்டும் வாய்ப்பை பெறும்.
இவ் T20 உலக கிண்ணப் போட்டி இந்திய மண்ணில் இடம்பெறுவதால் இந்திய அணி இவ்வருட ICC T20 உலக கிண்ணத்தை சுவிகரித்துக்கொள்ளும் என கிரிகெட் விமர்சகர்கள் தெறிவித்துள்ளனர்..
இருப்பினும் கிரிகெட் ரசிகர்கள் ஆவளுடனும் எதிர்பார்த்து இருக்கின்றனர்....


