கல்வியினை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும், - மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்.

Written By avathani Media Network on Saturday, March 19, 2016

(ஜுனைட்.எம்.பஹ்த்)
கல்வியினை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும், கல்வி கற்பவர்கள் யாராக இருப்பினும் இனபாகுபாடின்றி அனைவருக்கும் கல்வி சென்றடைந்து அவர்களும் சமூகத்தில் சிறந்த நற்பிரஜைகளாக உருவாக வேண்டும் என்ற உன்னத நோக்கோடு, கடந்த 10.03.2016 ஆம் திகதி அன்று மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தாழங்குடா மட்/றோ.க.த.க பாடசாலைக்கு கிழக்கு மாகான சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அப்பாடசாலையின் நிலைமைகளை நேரில் கண்டறிந்தார்.

இவ் விஜயத்தின்போது இப்பாடசாலையில் இவ்வருடம் தரம் 5 புலமைபரிசீல் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் எதிர்வரும் புலமைபரிசீல் பரீட்சையில் தோற்றுவதற்காக மாதிரி பயிற்சி வினாத்தாள்களை பெற்று பயிற்சி பெறுவதற்கு போதுமான வசதிவாய்புக்களின்றி மிகவும் சிரமத்தின் மத்தியில் கல்வியினை தொடர்கின்ற ஓர் துர்பாக்கிய நிலைமையினை கண்டறிந்தார், இத்துர்பாக்கிய நிலைமையினை நீக்கும் முகமாக உடனடியாக அம் மாணவர்களுக்கு போதுமான ஒரு தொகுதி புலமைபரிசீல் மாதிரி பயிற்சி வினாத்தாள்களை தனது செந்த நிதியிலிருந்து வழங்குவதாக வாக்களித்திருந்தார்.

அதன் பிரகாரம் அதனை நிவர்த்திசெய்யும் முகமாக புதன்கிழமையன்று (16.03.2016) பாடசாலை அதிபரூடாக அம் மாணவர்களுக்கு மாதிரி புலமைபரிசீல் பயிற்சி வினாத்தாள்களை வழங்கி வைத்தார், அத்துடன் அரசாங்கத்தினால் இலவச சீருடை துணிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அதனை தைத்து அணிவதற்கு வசதிகள் அற்ற மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் இங்கு கல்வி கற்கின்றனர், அவ்வாறான மாணவர்களை இனங்கண்டு அவர்களுடைய சீருடைகளை தைப்பற்கான செலவீனங்களை (கூலி) தனது சொந்த நிதியிலிருந்து வழங்குவதாகவும் கூறியிருந்தார் அதன் அடிப்படையில் தையல் நிலையத்திற்கு சென்று அதிபரூடாக தையல் நிலைய உரிமையாளரிடம் அம் மாணவர்களின் சீருடைகளை தைப்பற்கான செலவீனங்களை கிழக்கு மாகான சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வழங்கிவைத்தார்.

புதன்கிழமையன்று (16.03.2016) நடைபெற்ற இந்த பெறுமதிமிக்க நிகழ்வில் கிழக்கு மாகான சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.









Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.