(ஜுனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடி முஹாசபா மீடியா நெட்வொர்க் இனால் இன்று (18.03.2016) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் "கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளி கொடியேற்றமும்! ஈமானை இழக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகளும்!" எனும் தலைப்பில் பிரசுரம் வெளியிடப்பட்டது..
இப்பிரசுரம் முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது 09 வது வெளியீடாகும். இவ் அமைப்பினர் சம காலத்தில் சமூகத்திற்கு தேவையான சமுக கலாச்சார விழிப்புணர்வு பிரசுரங்களை தொடர்ச்சியாக வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும்..
இப்பிரசுரங்களை பெற்றுக்கொள்ள விரும்பும் காத்தான்குடி சகோதரர்கள் 0770741849 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் வெளியூர் சகோதரர்கள் உங்கள் பெயர் தபால் முகவரி என்பவற்றை முஹாசபா வெளியீடு 09 என்றும் எழுதி 0770741849 என்ற இலக்கத்திற்கு SMS அனுப்பி தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.




