காத்தான்குடியில் காய்த்துக் குலுங்கும் பேரீச்சை...

Written By avathani Media Network on Friday, March 25, 2016



(ஜுனைட்.எம்.பஹ்த்)
மத்திய கிழக்கு நாடுகள் போன்று மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே சுமார் 70 பேரீத்த மரங்கள் நடப்பட்டு காத்தான்குடி நகர சபையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிக வெப்பநிலை நிலவுவதால் இப் பிரதான வீதியிலுள்ள அதிகமான பேரீத்த மரங்களில் பேரீத்தம் பழங்கள் பூத்தும் காய்த்தும் காணப்படுகின்றது.

மேற்படி பேரீத்தம் மரங்கள் கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் வீதிகளை அழகுபடுத்தும் விஷேட திட்டத்திற்கமைவாக 2008-2009 காலப்பகுதியில் தற்போதைய இராஜாங்க அமைச்சரும் , மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியில் உருவானதாகும்.

இப் பேரீச்சை மரங்கள் கடந்த வருடத்தை விட இந்த வருடமும் அதிகமான மரங்களில் பேரீத்தம் பழங்கள் காய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.