இறந்தவர்களின் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விடைகளில் உள்ளடக்கி பரீட்சை வினாத் தாள் தயாரிக்கப்பட்ட சம்பவமொன்று வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தில் பதிவாகியுள்ளது.
வட மேல் மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்டு வரும் முதலாம் தவணைப் பரீட்சையில் தரம் 10க்கான பரீட்சை வினாத்தாளில் இவ்வாறான ஓர் கேள்வி உள்ளடக்கப்பட்டுள்ளது.
தம்மால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நல்ல காரியங்களையும் தனது புண்ணிய புத்தகத்தில் குறித்து தான் மரணிக்கும் தருவாயில் அதனை வாசித்து, தன்னால் நிர்மானிக்கப்பட்ட விஹாரை ஒன்றை பார்த்துக் கொண்டே இறுதி மூச்சைத் துறந்த அந்நிய சக்திகளிடமிருந்து நாட்டை பாதுகாத்த சிரேஸ்ட ஆட்சியாளர் யார்?
1. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
2. முதலாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன
3. துட்டகைமுனு மன்னர்
4. பராக்கிரமபாகு மன்னர்
என இந்த வினாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னமும் உயிருடன் இருக்கும் மஹிந்த ராஜபக்ஸவை இறந்தவர்களின் பட்டியலில் இணைத்து வட மேல் மாகாண கல்வித் திணைக்களம் வினாத்தாள் தயாரித்துள்ளது.
உரிய நேரத்தில் பரீட்சை நடத்தாமை, போதியளவு வினாத்தாள்களை அச்சிடாமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மாகாண கல்வித் திணைக்களம் மீது சுமத்தப்பட்டுள்ளது.

