(S.சஜீத்)
கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தில் UNDP நிறுவனத்தின் அணுசரணையில் இளையோர் தலைமைத்துவ பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த இளைஞர்களைக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் (29.01.2016) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் UNDP நிறுவனத்தின் ஏற்பாட்டில் காலை 10.00 மணிமுதல் பி.ப 3.00 மணிவரை இடம்பெற்றன.
இந் நிகழ்வின் போது UNDP நிறுவனத்தின் தலைமை அதிகாரியான திரு. தனராஜ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட UNDP நிறுவன அதிகாரியான திரு. சுபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டகளப்பு மாவட்டத்தினுள் இருந்து காத்தான்குடி, ஆரையம்பதி, வெல்லாவெளி, பட்டிப்பளை, போரைதீவுப்பற்று மற்றும் வவுனதீவு ஆகிய பிரதேச செயலகங்கள் பிரிவில் இருந்து இளையோர் தலைமைத்துவ கற்கைநெறியினை பின் தொடர்ந்த இளைஞர்களை அழைத்து மட்டக்களப்பு மாவட்டத்தினுள் காணப்படும் கிராம மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் ஒரு சில பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடலும் மற்றும் அவர்களின் பிரச்சனைகளை எப்படி தீர்வுக்கு கொண்டு வருவது என்பது பற்றியும் அவர்களுக்கு என்ன விதமான அபிவிருத்திகளை உண்டு பன்னிக் கொடுக்க வேண்டு என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இவ்வேளையில் பங்கு பற்றிய இளைஞர்களை இரண்டு குழுக்களாக பிரித்து கிராமங்களுக்குகிடையிளான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு ஒரு சில பொறுப்புகளும் UNDP நிறுவனத்தினரால் வழங்கிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
