(S.சஜீத்)
காத்தான்குடியை அன்டிய பாலமுனை, ஓடாவியார் வீதிக்கு அண்மித்த பகுதியில் காணப்படும் ஓடை ஒன்றில் இருந்து ஜெயினுலாப்தீன் எனும் குறிப்பிட்ட நபர் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை பி.ப 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
மேலும் குறித்த நபர் பாலமுனை பகுதியைச் சேர்ந்த (71 வயது)டைய ஜெயினுலாப்தீன், துவிச்சக்கரவண்டி திருத்துனர் என்பவரே ஜானாஸாவாக மீட்க்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் இரவு நேரத்தில் வேலை முடிந்து வந்த போதுதான் ஓடையில் தவரி விழுந்து மரணித்திருக்கலாம் என அன்டைய வீட்டார் பொலிஸாரிடம் தகவல் தெரிவிதத்தனர்.
தற்போது ஜானாஸா மேலதிக பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னேடுத்து வருகின்றனர்

