(ஜுனைட்.எம்.பஹ்த். முஹம்மட் பர்ஸாத்)
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி 05 யில் 10 வயது யுஸ்ரி
எனும் சிறுமிக்கு நெருப்பினால் சூடு வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சிறுமியின் தந்தை மஜீத் (றப்பாணி) மற்றும் வளர்ப்புத் தாய் மும்தாஜ் ஆகியோர்களது வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று 28.03.2016 திங்கட்கிழமை
விசாரனைக்கு எடுத்துக்கொண்ட போதே மேற்படி
இருவருக்கும் ஏப்ரல் மாதம் 11ம் திகதி வரை விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி இவர்கள் இருவரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
மட்டக்களப்பு நீதாவான் நீதிமன்ற பதில் நீதிபதி கண்ணன்
உத்தரவிட்டிருந்தார்.
மேற்படி
இருவருக்கு பிணை வழங்கக் கூடாது என கடந்த 21.03.2016 ம் திகதி
திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் பெருந்திரலான
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

