அத்வைதிகளின் ஊடக அறிக்கை: அப்துர் றஊப் மௌலவி அடைகாக்கப்பட்டார் மஜீத் ரப்பானி பலிகடாவாகினார்.

Written By avathani Media Network on Friday, March 18, 2016


(முஹம்மது நியாஸ்)
அப்துல் மஜீத் ரப்பானியின் மகளுக்கு நெருப்புச் சூடு வைத்த விடயம் தொடர்பில் அப்துர் ரவூப் மௌலவியின் அத்வைதக் கூடாரங்களில் ஒன்றான ‘அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு’ வெளியிட்டுள்ள அறிக்கையில், இக்கொடூரச் சம்பவத்தைக் கேள்வியுற்று அவர்கள் கவலையும், மன வேதனையுமே அடைந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், மஜீத் ரப்பானியை 15.03.2016 முதல் இந்நம்பிக்கைப் பொறுப்பின் சகல பதவிகளில் இருந்தும் தற்காலிகமாகவே இடைநிறுத்தம் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மஜீத் ரப்பானியின் மகளுக்கு நெருப்புச் சூடு வைக்கப்பட்ட விடயமானது அப்துர் ரவூப் மௌலவியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது தொடர்பாகவோ, அதற்கவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவோ இவர்கள் மறந்தும் அவ்வறிக்கையில் சம்பந்தப்படுத்தி ஒரு வரிதானும் வரையவில்லை.

சிறுமி யுஸ்ரிக்கு அக்னிச்சூடு வைக்கப்படும் விடயம் முன்னரே றவூப் மௌலவியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும் அவர் அது குறித்து காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. அத்துடன், ஒரு சமாதான நீதவானான அவர் இக்கொடுமை பற்றி பொலீசாருக்கோ, சிறுவர் துஷ்பிரயோக ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கோ தகவல் வழங்கவும் இல்லை.

இந்த வகையில் அவர் இக்குற்றச்செயல் குறித்து அறிந்திருந்தும் தகவல் வழங்காது இக்கொடூரம் தொடர்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரும் காத்தான்குடிப் பொலீசாரினால் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் சார்ந்த அரசியல்தரப்பின் செல்வாக்கினால் அவரைப் பொலீசார் கைதுசெய்யாமல் விட்டுவிட்டார்கள்.

எனினும், இந்த வழக்கில் நீதிமன்றம் அப்துர் ரவூப் மௌலவியின் சாட்சியத்தையும் பெற வேண்டும். வன்முறை ஒன்று தொடர்பில் பொலீசாருக்கு தகவல் வழங்க மறுத்த அப்துர் றவூப் மௌலவியையும் பொலீசார் உடனடியாகக் கைது செய்து இந்த வழக்கில் இணைக்க வேண்டும். அதற்காக வேண்டி அநீதிக்கு எதிரான சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டுக் குரல் எழுப்ப வேண்டும். ஜனநாயக வழியிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.


ஆனால் அத்வைத கூடாரிகளோ மிகவும் சமயோசிதமாக இச்சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் அப்துர் ரவூப் மௌலவியை இவர்கள் அவ்வறிக்கையில் தவிர்த்திருக்கின்றனர்.

உண்மையில் இக்கொடூர விவகாரம் பற்றி அப்துர் ரவூப் மௌலவிக்கும், இந்நம்பிக்கைப் பொறுப்பு கூடாரிகளுக்கும் ஏற்கனவே எதுவும் தெரிந்திருக்கவில்லையென்றால் அல்லது இச்சம்பவம் ஊர் முழுக்க பரவலாகத் தெரிய வந்தபோதுதான் அப்துர் ரவூப் மௌலவிக்கும், இந்நம்பிக்கைப் பொறுப்பு கூடாரிகளுக்கும் தெரிய வந்ததா?
இவர்கள் யாரை ஏமாற்றப்பார்க்கிறார்கள்?

எனவே, இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியைக் காப்பாற்றுவதை விட, மஜீத் ரப்பானியை தற்காலிகமாகப் பலி கொடுத்தேனும் அப்துர் ரவூப் மௌலவியை நிரந்தரமாகக் காப்பாற்றியாக வேண்டும் என்பதில் காத்தான்குடிப் பொலீசார் உட்பட அத்வைதக் கூடாரங்களிலுள்ளவர்களும் கவனமாகவே செயற்பட்டுள்ளனர்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.