தபால் சேவை மேலும் நவீனப்படுத்தும் நோக்கில் யப்பான நாட்டு உதவியுடன் தபால் சேவையாளர்கள் மின்சார துவிச்சக்கர வண்டியைப் பயன்படுத்தி காகிதம் மற்றும் பொதிகளை வழங்கும் வகையிலான வேலைத் திட்டம் ஒன்றை நாடாபூராகவும் மேற்கொள்வுள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவிப்பு
தபால் சேவையை மேலும் நவீன மயப்படுத்தும் திட்டத்தின் கீழ் தபால் சேவையாளர்கள் தங்களுடைய காகிதம் பொதிகள் விநியோகங்களை இலகுவான முறையில் மேற்கொள்வதற்காக மின்சார துவிச் சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவதற்கு நாடு பூராகவும் மேற்கொள்வதற்கு திட்டம் மேற்கொள்வதற்கான கலந்துரையாடல் தபால் துறை மற்றும் முஸ்லிம் சமய கலாசாரத் துறை அமைச்சின் அலுவலகத்தில் இன்று 24-03-2016 நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட தபால் மற்றும் முஸ்லிம் சமயம் கலாசாரம் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யப்பான் நாட்டின் ஈ மினிகோ நிறுவனத்தின் பிரதிநிதி கென்ஜி பூஜிகி இந்நிகழ்வில் அமைச்சின் பதில் செயலாளர் ஏ. எஸ். ஏம். எஸ். மஹனாம. தபாலதிபர் டீ. எல். பீ. ஹோஹன அபேவர்தன அமைச்சின் அந்தரங்கச் செயலாளர் எம். எச். ஏ. பாஹிம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். (மாவத்தகம தினகரன் நிருபர்)



