(எம்.ரி.எம். யூனுஸ்)
பாவியவள்
பார்த்த வேலையாலே
தாய்மைக்கே இழுக்கு.!!
ஊர்ப் பற்று
ஊரார் பற்று என...
நிறையவே கோழி அறுத்த
மார்க்க மேதைக்கு...
சிட்டு மீது பற்று(ச்)
சொட்டாதது ஏனோ.!!
பிஞ்சு நிலவு
துடித்த போது...
பஞ்சனையில் நீ
தூங்கியது நியாயமா.??
எத்தனை கிதாபுகளை
புரட்டி இருப்பாய் நீ..
சிறுவர் மீது அன்பு
செய்யச் சொன்ன
கோமான் நபி
வாசகத்தை
பாவி உந்தன்
பார்வை மேயலையோ.??
பிஞ்சு மேனி
பொசுக்கியதில்
இவ்வளவு பிரியமா
சித்தியே...
சத்தியமாய் சொல்லுகிறேன்
நீ கருணை இல்லா...
பெண்மை இல்லா...
மனித மாமிசம்
சுவைக்கும் பேய்.!!
சொத்தாசை பிடித்த
உங்களை அப்படியே
நடுத்தெருவில்
இழுத்து வந்து
கிடத்த வேண்டும்.!!
நீ மிம்பரில் ஓதிய
கொத்பாவை...
கிடங்கு வெட்டி
புதைக்க வேண்டும்.!!!
உந்தன்
தாய்மையை சூரையாடி...
மலடிகளுக்கு கிரீடம்
சூட்ட வேண்டும்.!!
சின்னவளே
தாயில்லா உன்னை
தாலாட்டால் பாராட்ட...
பாசத்தால் கட்டிப் போட...
அன்பால் அரவணைக்க...
ஆண்டவன் இருக்கான்...
நிம்மதியாய் இரு.!!
யுஸ்ரி.!!!

