(S.சஜீத்)
காத்தான்குடி பிரதேசத்தில் தொடா்ச்சியாக சிறுவா்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவா் துஸ்பிரயோகம் போன்ற விடயங்களால் சிறுவா்கள் பாதிக்கப்பட்டுவருவதை கண்டித்து துரிதமன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளா் MIM.ஹாரிஸ் JP அவா்கள் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் மேலும் பாடசாலைகள்,மத்ரஸாக்கள், சிறுவா் இல்லம் ஏனைய பள்ளி விடுதிகளில் உள்ள சிறுவா்களும் பல்வேறு வகையில் பாதிக்கப்படுவதை கண்டறியக்கூடியதாக இருந்த போதிலும் ஒரு சில பிரச்சினைகள் மாத்திரமே வெளிவருவதுடன் கூடுதலான பிரச்சினைகள் மறைக்கப்படுகின்றன.
தற்போது காத்தான்குடியில்10 வயது சிறுமி தனது வளர்ப்பு தாயாலும் சொந்த தந்தையாலும் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே பொலிஸ் உத்தியோகத்தா்கள் தமது கடமையை சரியாக செய்து வருவதுடன் இவ் விடயத்தில் அரசியல் வாதிகளோ ஏனைய அதிகாரிகளே பக்கசார்புகளை மேற்கொள்வதற்க்கு இடமளிக்ககூடாது என கேட்டுக்கொண்டதுடன் இது தொடா்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துரிதமாக செயற்பட்டு நடவடிக்கை மேற்க்கொள்வது பாராட்டத்தக்கது
எனவே இது விடயத்தில் பொலிஸாா் பொது மக்களுடன் இணைந்து விழிப்பூட்டல்களையும் செய்து சிறுவா்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொலிஸ் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களுக்கும் இலங்கை மனித உரிமைகள் இயக்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் இலங்கை மனித உரிமை அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளரும் மக்கள் ஒன்றிய தலைவருமான MIM.ஹாரிஸ் JP அவர்கள் தொிவித்தார்.

