(S.சஜீத்)
காத்தான்குடி பிரதான வீதி அன்னாஸர் பாடசாலை முன்பாகவே இவ்விபத்து இன்று மதியம் அலவில் இடம்பெற்றன. இவ்விபத்தின் போது எவருக்கும் உயிராபத்து எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ் விபத்தானது மஞ்சல் கடவையில் மாணவர்கள் கடப்பதற்கு முயன்ற வேளை வேனில் வந்தவர் வாகனத்தை நிறுத்தி அவர்களுக்கு வழிவிட்ட போதே பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் சாரதி தனது கட்டுப்பாட்டை இலந்து வேனுடன் பின் பக்கமாக மோதியே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னேடுத்து வருகின்றனர்.





