காத்தான்குடி சமூகம் விழிப்படையுமா?

Written By avathani Media Network on Tuesday, March 29, 2016


(அ.அ முகம்மது ஜுமானி)

சிறுமி ஒருவருக்கு வளர்ப்புத் தாய் சூடு வைத்து கொடுமைப் படுத்திய சம்பவம் நாம் அறிந்ததே, அந்த சிறுமிக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டுமென்பதில் பல சகோதர சகோதரிகள் தங்களால் இயன்ற வகையிலும் தமது பங்களிப்புகளை வழங்கி இருந்தார்கள். 

எனினும் சிலர் அச்சிறுமியின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொள்ளாமலும் , குடும்ப உறுப்பினர்களை உள ரீதியாக பாதிக்கும் வகையிலும் நடந்து கொண்டார்கள். குறிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய புகைப்படங்களை சிறுமியின் பெயரால் வெளியிட்டமையானது சமூக நீதிக்கு முரணாக அமைந்திருந்ததுடன் மனத்தன்மையுள்ள எவராலும் அங்கீகரிக்கப் பட்டிருக்காது. அமானிதங்களை பாதுகாத்தலும் , தனி நபர் இரகசியங்களை பாதுகாத்தலும் இஸ்லாத்தில் முக்கிய விடயமாக காணப்படுகிறது. 

அதேவேளை தான் பணி புரியும் இடத்திலுள்ள தனி நபர் சார் விடயங்களை பாதுகாத்தல் தொழில் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. இவற்றிற்கு மாறாக செயற்பட்டு தஃவா அமைப்பொன்று அங்கீகாரம் வழங்கலாமா? 

இந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டிய விடயம் என்ன?

குறிப்பிட்ட சில அதிகாரிகளால் மட்டுமே கையாளப் பட வேண்டிய புகைப்படங்களை முதன் முதலாக வெளி நபர்களுக்கு வழங்கியது யார் ? 

எதிர்காலத்தில் தனக்கு வேண்டாதவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களை யாராவது பெறுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறதா? 

எமது தகவல்களை நாம் எந்த நம்பிக்கையில் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப் போகிறோம்? 

எமது சகோதரர , சகோதரிகளின் புகைப்படங்களை பெற முடியுமான சூழ்நிலை காணப்பட்டால் அது சிந்திக்க வேண்டிய விடயமல்லவா?

சகோதர , சகோதரிகளே! 

இந்த விடயத்தின் பாரதூரமான நிலையினை உணர்ந்ததாலேயே இந்த ஆக்கத்தினை எழுத வேண்டி ஏற்பட்டது. இந்த ஊரின் நலனைக் கருத்திற் கொண்டு இதில் மறைந்துள்ள உண்மைகளை வெளிக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்..

நாம் ஒன்றினைந்து பொறுப்பு மிக்க சமூகத்தினைக் கட்டியெழுப்புவோம். 
இன்ஷா அல்லாஹ் 

அல்லாஹ் நம் தூய எண்ணங்களை அங்கீகரிப்பானாக....





Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.