BCAS உயர் கல்வி நிறுவனத்தில் CAD&BS கற்கை நெறியினைப் பூர்த்திசெய்து தற்போது Doha Qatar நாட்டில் தொழில் புரிந்து வருபவர்களில் ஒரு தொகுதி மாணவர்களை BCAS உயர் கல்வி நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அப்துல் றகுமான் அவர்கள் கடந்த வாரம் Qatar நாட்டில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலின்போது தற்போது அவர்களின் தொழில் நிலவரங்களை கேட்டறிந்து கொண்டதோடு எதிர்காலத்தில் BCAS இனூடாக தகைமைகளைப் பெற்று வெளியேறும் மாணவர்களுக்கு அவர்களால் வழங்கப்பட கூடிய உதவி ஒத்தாசைகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் குறிப்பிட்ட துறையில் மாணவர்களை சிறப்புத் தேர்ச்சி பெற வைக்கும் முகமாக அவர்களுக்கான துறை சார்ந்த இலவச பயிற்சிப் பட்டறைகளை Qatar BCAS Centre யினூடாக எதிர் காலத்தில் நடாத்துவதற்கும் உறுயளிக்கப்பட்டதோடு தற்போதைய தொழில்; வழங்குனர்கள் எதிர்பார்க்க கூடிய புதிய விடயங்கள் என்ன? என்பதை ஒரு கள ஆய்வாக மேற்கொண்டு எதிர்கால கற்கை நெறிகளில் அவற்றை உள்வாங்குவதற்கான மாணவர்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டது.
தகவல் மற்றும் படங்கள். பைஸர் அமான்







