(ஜுனைட்.எம்.பஹ்த்)
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குற்பட்ட புதியகாத்தான்குடி
மட்/மம/பிர்தௌஸ் வித்தியாலயத்தின் தேவைகளை கண்டறியும் நோக்குடன் கடந்த
பெப்ரவரி மாதம் 18.02.2016 அன்று பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றை கிழக்கு மாகாண் சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மேற்கொண்டு பாடசாலையின் அபிவிருத்தி, மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள், மற்றும் பல தேவைகளை கேட்டறிந்து அதற்கான சில உதவிகளை மாகாணசபை மூலம் பெற்று தருவதாக கூறினார் .
மேலும் உடனடியாக தேவையாக காணப்பட்ட நீர் வளப்பற்றாக் குறையினை நிவர்த்தி செய்து தருமாறு பாடசாலை அதிபரினால் விடுக்கப்பட்ட வேண்டுகளினை தீர்க்கும் முகமாக நீர்பம்பி, குழாய்கள், மற்றும் அதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி பிர்தௌஸ் பாடசாலைக்கு நீர் தொகுதியொன்றினை
முற்றுமுழுதாக ஏற்படுத்தி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் வைபவம் மிக
அண்மையில் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது ஆசிரியர்கள்
பாடசாலை அபிவிருத்தி குழு உருப்பினர்கள் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தார்கள்., இதன்போது அவர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருக்கு
உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தனர்.
