திருடினாலும் குறைந்த விலையில் ‘பசளை’ கொடுத்தேன்: மஹிந்த

Written By avathani Media Network on Monday, March 7, 2016

இந்த அரசாங்கம் தம்மைத் திருடன் என பட்டம் சூட்டியிருப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அப்படித்தான் திருடினாலும் ரூ.350க்குப் பசளை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமன்றி தனது காலத்தில் பாதாள உலகத்தைக் கட்டுப்படுத்தியிருந்ததாகவும் வீதி அபிவிருத்திகள் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்ட அவர், இப்போது பேஸ்புக்கில் ‘திருடியாவது அபிவிருத்தியை செய்யுங்கள்’ என அரசுக்கு பொது மக்கள் கருத்தெழுதுவதாகவும் அத்தனை தூரம் அபிவிருத்தி நடவடிக்கைகள் தேங்கிக் கிடப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.