கடந்த 5-03-2016 அன்று யாழ்ப்பாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணி தொடர்பிலான பிரச்சினைகளைக் கலந்துறையாடுவதற்கென விஷேட கூட்டம் யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது, குறித்த கூட்டத்தில் செய்தி சேகரித்தல் என்னும் பெயரில் உள்ளே நுழைந்து உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முயற்சித்த பாரூக் சிஹான் என்பவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனை ஒரு பூதாகரமான விடயமாக வெளியில் சித்தரிக்க உடனே சிஹான் மடவளை நியூஸ் மற்றும் ஜப்னா முஸ்லிம் ஆகிய இணையத்தளங்களில் “யாழ் முஸ்லீம் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண செயலணிக் கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு” இணையத்தள இணைப்பு (http://www.madawalanews.com/2016/03/blog-post_88.html) என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டார். பொதுவாக அத்தகைய இணையத்தளங்களில் செய்திகளை கொப்பி அடிக்கும் வசதிகள் இருப்பதில்லை.
அதே செய்தி இன்று 7-03-2016 தினக்குரல் யாழ் பதிப்பில் “இரகசியக் கூட்டம் போல நடந்த யாழ் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளை ஆராயும் கூட்டம். என்னும் தலைப்பில் செய்தியாக வெளிவந்திருக்கின்றது. இந்தச் செய்தி தொடர்பாக ஜனாப் ஷரபுல் அனாம் அவர்கள் சிகானைத் தொடர்புகொண்டு கேட்டபோது தனக்கும் அந்த செய்திக்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளார்; அப்போ தினக்குரல் நாளிதழுக்கு குறித்த செய்தி எவ்வாறு கிடைக்கப்பெற்றது, இணையத்தளங்களில் கொப்பி அடித்துத்தான் செய்தி வெளியிடவேண்டிய கீழ்த்தரமான நிலையில் “தினக்குரல்” நாளிதழ் இருக்காது. (ச39) என்ற இலக்கம் யாருடையது என்ற கேள்வியும் இருக்கின்றது, தினக்குரலோடு அறிமுகமான மற்றுமொரு நிருபர் மேற்படி இலக்கம் சிஹான் அவர்களுடையது என்று குறிப்பிட்டுள்ளார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்றபோது குறித்த சிஹான் என்னும் ஊடகவியலாளர் தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றி ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டிருக்கின்றார் என்பது புலனாகின்றது.
மேற்படி செய்தியை அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளோம், அதேபோன்று சமூக வலையத்தளங்களிலும் பதிவிடுகின்றோம், முடியுமானவரை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இந்தச் செய்தியை பகிர்ந்து, இதன் உண்மையை நிலையை மக்களுக்கு உணர்த்த வேண்டியது நம் எல்லோரதும் பொறுப்புமாகும்.



