துரைவி 85வது பிறந்த நிகழ்வும் நினைவுப் பேருரையும் நூல் வெளியீடும்

Written By avathani Media Network on Saturday, March 5, 2016



28.02.2016 அன்று காலை பத்து மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் துரைவின் 85 வது விழாவும் துரைவி நினைவுப் பேருரையும், துரை நினைவுப் பேருரைகளின் தொகுப்புநூல் வெளியீட்டு விழாவும், தெளிவத்தை ஜோசப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வரவேற்புரை திருமதி ஜெயம் துரை விஸ்வநாதன் நிகழ்த்தினார்.

இந்த விழாவில் 10 வது துரைவி நினைவுப் பேருரையினை ‘’பெண்மையின் கட்டமைப்பும் அதன் நீட்சியாக ஆண்மையின் அனுகூல அதிகார ஆட்சியும் - ஓர்; உளவியல் நோக்கு ‘’ எனும் தலைப்பில் கலாநிதி செல்வி திருச்சந்திரன் அவா;கள் நிழ்த்தினார்

இவ்விழாவில், துரைவி நினைவுப் பேருரைகள் தொகுப்பு நூலுக்கான வெளியீட்டு உரையை பாராளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான மல்லியப்புசந்தி திலகர்; அவா;கள் நிகழ்த்தினார். நூலின் முதற் பிரதியினை புரவலா; ஹாசிம்; ஒமர் பெற்றுக் கொண்டார். கருத்துரையினை மாத்தளை கார்த்திகேசு நிகழ்த்தியதோடு, நன்றியுரையினை ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன் நிகழ்த்தினார் நிகழ்ச்சிகளை மேமன்கவி தொகுத்தளித்தார்.

இந்த நிகழ்வில் 2015 ஆம் ஆண்டுக்கான துரைவி நூல்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதினை மாவனல்லை எம் எம் மன்சூர், கட்டுரைத் தொகுப்புக்கான விருதினை சு. தவச்செல்வனும் பெற்றுக் கொண்டார்கள்.

துரைவின் 85வது பிறந்த தினத்தினை முன்னிட்டு ‘ ஈழத்துப் பிராந்திய நாவல் இலக்கியம்’ எனும் தொனிப் பொருளில் நடத்தப்பட்ட ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் வெற்றி ஈட்டியவா;களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. அவ்விருதுகளை அக்கரைப்பதன மாரிமுத்து சசிரேகா, மூதூர் ஏ.எஸ். உபைத்துல்லா. நற்பிட்டிமுனை சஞ்சீவி சிவகுமார்,யாழப்பாணம் கந்தசாமி கவுசிகன், டயகம பொ.புஷ்பராஜூ, ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.