வடக்கு அதிவேக நெடுஞ்சாலை பாதையின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது குறித்தான நடவடிக்கைகள் நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஏற்கனவே தெற்கு மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளை ஆரம்பித்தது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமாகும். அதுமாத்திரமின்றி முக்கிய அபிவிருத்தி திட்டங்களை எமது கட்சியே ஆரம்பித்து வைத்தது.
வடக்கு அதிவேக நெடுஞ்சாலை பாதை ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது குறித்தான நடவடிக்கைகள் நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்படும்.
கொழும்பிலிருந்து மீரிகமைக்கும் பொத்துஹரவிலிருந்து கலகெதரவிற்கும் பொத்துஹரவிலிருந்து குருநாகலுக்கும் குருநாகலிருந்து தம்புள்ளை வரைக்குமாக நான்கு கட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

