(சஜா எம் அனைஸ் )
மக்கள் தேவையை தனது சேவையாக செய்துவரும் நாபீர் பௌண்டசனை பலப்படுத்தி மக்கள் விரும்பும் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் நோக்கில் தான் நாபீர் பௌண்டசனுடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ளதாகவும்.எதிர்வரும் உள்ளுராட்சிசபை தேர்தலில் தனித்து களமிறங்கும் நாபீர் பௌண்டசன் அணியின் சார்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் களமிரங்கப்போவதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் எதிர்கட்சித்தலைவர் தமீம் ஆப்தீன் தெரிவித்தார்.
அண்மையில் நாபீர் பௌண்டசன் தலைவர் பொறியலாளர் உதுமான்கண்டு நாபீர் அவர்களை சந்தித்து உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் எதிர்கட்சித்தலைவர் தமீம் ஆப்தீன் தனது பயணத்தை இந்த அமைப்புடன் இணைத்துக்கொண்டு செல்ல தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும்,மு.அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பிலும் இவர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினாராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

