காத்தான்குடி Kent Academy யின் ஏற்பட்டில் இடம்பெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வு

Written By avathani Media Network on Monday, February 22, 2016

காத்தான்குடி Kent Academy யில் கடந்த 2015 இல் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு காத்தான்குடி கலாசார மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (20,21-02.2016) ஆகிய தினங்களில் வெகு விமர்சையாக நடை பெற்றது.

முதல் நாள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் Dr. Musthafa Phd அவர்களும். அதேபோல் இரண்டாம் நாள் நிகழ்வுக்கு Dr.Rifaz Phd (தேசிய கண்வைத்தியசாலை கொழும்பு) அவர்களும் பிரதம அதிதியாக  கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் மேலும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

மாணவர்களின் ஆங்கிலப் புலமையை அதிகரிக்கும் பொருட்டும், கலைத்தன்மைகளை வெளிக்காட்டும் பொருட்டும் நடை பெற்ற இந்நிகழ்விலே மாணவர்களின் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்படனஎன்பது குறிப்பிடத் தக்கது.








Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.