(முஹம்மட் அனீஸ்)
நேற்று கல்முனை நகரில் பட்டப்பகலில் தனியார் வங்கி பெண் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். இவரைக் கொலை செய்ததாக அதே வங்கியில் முன்னாள் உதவி முகாமையாளரக கடமையாற்றிய ஒருவர் சந்தேகத்தின் பெயரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பெயரில் கைது செய்ப்பட்ட நபர் ஏற்கனவே குறித்த வங்கியில் பல ஆவண மோசடிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அதற்கு கொலை செய்யப்பட்ட பெண் ஊழியர் ஒத்துழைக்காமையே இக்கொலைக்குக் காரணம் எனவும் தெரிய வருகிறது.
இவர் வங்கி ஊழியரைக் கொலை செய்ய வரும் போது அணிந்து வந்த தலைக் கவசத்தை கொலை நடந்த இடத்தில் தவறவிட்டுச் சென்றமையும் இவரைக் கைது செய்ய உதவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர். இக்கொலைச் சம்பவம் கல்முனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத் தக்கது.

