ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் படுகொலை : சொத்து தகராறில் விபரீதம்

Written By avathani Media Network on Sunday, February 28, 2016

மகராஷ்டிர மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேரை கத்தியால்கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள கசார்வடாவலி பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்கள் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். அதில் அனைவரும் பலியாகினர். அதில் 7 குழந்தைகளும் 6 பெண்களும் அடக்கம். அதன்பின் அவர் கையில் கத்தியுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

அதில் ஒரு பெண் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அதனால் போலீசாரால் அவரிடமிருந்து எந்த வாக்குமூலமும் வாங்க முடியவில்லை.

சொத்து தகராறின் காரணமாக இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர்கள் விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.