மேல் மாகாணத்தில் 1500 பேரை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கு தீர்மானம்

Written By avathani Media Network on Sunday, February 28, 2016

மேல் மாகாணத்தில் 1500 பேரை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இவர்களுள் 835 பேரை அடுத்த மாதம் முதல் வாரத்தில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக மேல்மாகாண கல்வியமைச்சர் ரஞ்சித் சோமவங்ச தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆசிரியர் போட்டி பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய இவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கையையடுத்துள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் நீர்கொழும்பு,மினுவங்கொடை,கொலன்னாவை மற்றும் பேருவளை உள்ளிட்ட பல கல்வி வலயங்களுக்கு இந்த ஆசிரியர்கள். இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மேல் மாகாண கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் மேல் மாகாணத்தில் 2565 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.