(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரை மாவட்டம், காரைதீவைச் சேர்ந்த நபரொருவர் துக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
காரைதீவு 12ச் சேர்ந்தஇ 02 பிள்ளைகளின் தந்தையான தம்பிப்பிள்ளை பிறைசூடி (வயது-40) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:-
மரமேறும் கலையைப் பிரதான தொழிலாகக் கொண்டுள்ள குறித்த நபர் நேற்று இரவு 7.00 மணியளவிள் தனது வீட்டு முற்றத்தில் உள்ள கிட்டத்தட்ட 60 அடி நீளமுள்ள இலவம்பஞ்சு மரத்தில் ஏறி சில கிளைகளை வெட்டியுள்ளார். பின்னர் அம்மரத்திலேயே தூக்கிட்டு தொங்கியுள்ளார்.
இதற்கிடையில் தனது மனைவி ஏற்கனவே வெளிநாடு சென்று திரும்பியிருந்த நிலையில் அவர் மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று கணவனிடம் கூறியதாகவும், அதற்கு அவர் நீ மீண்டும் வெளிநாடு சென்றால் இவ்வாறே தூக்கில் தொங்குவேன். என விளையாட்;டாக நடித்துக் காட்டிய வேளையில், அவரின் உயிர் பிரிந்து சென்றதாகவும், உயிரிழக்கும் போது குறித்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும் அவர் மனைவி, மக்கள், தாய், சகோதரங்கள், அயலவர்கள் முலமாக அறிந்ததாகவும் எமது பிரந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ள இடத்திற்கு நேற்றிரவு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் ஏ.எம்.நசீல் நேரடியாகச் சென்று, சுமார் 40 அடி தூரத்தில் தொங்கிய சடலத்தினை கீழே இறக்குவதற்கான உத்தரவினைப் பிறப்பித்தார்.
பொதுமக்களின் ஒத்துழைப்போடு, பொலிசார் இரவு 9.00மணி தொடக்கம் இரவு 11.30 மணிவரை சடலத்தைக் கீழே இறக்கும் முயற்சிகளில் ஈடுபட்டும் அம்முயற்சிகள் பயனளிக்கவில்லை. அதனால் இன்று காலையில் கல்முனை டெலிகோம் நிறுவனத்திற்குச் சொந்தமான பாரந்தூக்கும் கனரக இயந்திரத்தின் உதவியோடு சடலம் தரைக்குக் கொண்டு வரப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் காரைதீவில் இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன.
இச்சடலத்தைக் கீழே இறக்கும் முயற்சிகளில் சம்மாந்துறைப் பொலிசாரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. பிரதேச மக்களைவிட பொலிசார் மிகத் தியாகத்துடன் செயற்பட்டனர். இவ்வாறு தியாக சிந்தையுடன் சம்மாந்துறைப் பொலிசார் எப்போதும் செயற்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
