பலபிட்டிய நீதிமன்ற வளாகத்தில் இனந்ததெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்ட ”பியா” என்றழைக்கப்படும் கனந்த ஆராச்சிலாகே பியரத்ன என்பவரின் சடலத்தைப் பொறுப்பேற்க நேற்றுவரை எவரும் முன்வரவில்லையென பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஸ்தலத்திலேயே ”பியா” கொல்லப்பட்டதுடன், சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு நபர் 17ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்தார்.
கந்தளாய் யுனிட் 16 என்ற முகவரியில் வசித்து வந்ததாக கூறப்படும் பியா என்ற நபருக்கு 1990களில் இருந்தே பாதாள உலகக் குழுவினருடன் தொடர்பிருப்பதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

