அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான செயலமர்வும், கலந்துரையாடலும்..

Written By avathani Media Network on Sunday, February 21, 2016

(ஜுனைட்.எம்.பஹ்த்)
கண்டி மாவட்டத்திலுள்ள கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைமைகளுக்கு, அரசியலமைப்பு மாற்றம் குறித்து தெளிவுபடுத்தும் செயலமர்வு மற்றும் கலந்துரையாடல் ஒன்றை, நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு (PMJD) ஏற்பாடு செய்துள்ளது.

இன்று ஞாயிற்றுக் கிழமை (21.02.2016) இரவு 7.00 மணி முதல் 9.00 மணிவரை, அக்குறணை அம்பதென்னை கிக்ஸ்கோட் மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சட்டமுதுமாணி எம்.ஏ.எம். ஹகீம் கலந்துகொள்ளவுள்ளார்.

இம்முக்கிய நிகழ்வில் நீங்களும் கலந்துகொள்ள விரும்பினால்  0777-842849 ( இர்பான் காதர்) என்ற இலக்கத்தை   தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்..
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.