காத்தான்குடி மெத்தைப் பள்ளி வித்தியாலயத்தின் பதிய அதிபராக ஆதம்அலி நியமனம்.

Written By avathani Media Network on Wednesday, February 1, 2017

(காத்தான்குடி டீன்பைரூஸ்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் காத்தான்குடி மெத்தைப் பள்ளி வித்தியாலயத்தின் பதிய அதிபராக அப்துல் கரீம் முஹம்மது ஆதம்அலி கிழக்கு மாகாண கல்வி அமைச்சினூடாக நியமனம் செய்யப்பட்டு அவர் தனது கடமையினை (2017.01.31 செவ்வாய்) பொறுப்பேற்றுக் கொண்டார்.

காங்கயனோடை ஆரயம்பதியை பிறப்பிடமாகக் கொண்ட ஏ.சீ.எம்.ஆதம்அலி 1984.12.27 தனது முதல் நியமனம் பெற்று குருநாகல் மாவட்டம் நிக்கவரெட்டிய முஸ்லிம் மத்திய கல்லுரியில் சுமார் 25 வருடங்கள் ஆசிரியராக, பதில் அதிபராக கடமையாற்றியுள்ளார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஆரயம்பதி கோட்டக் கல்வி பணிமனையின் பதில் கோட்டக் கல்வி பணிப்பாளராக சுமார் ஐந்து ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார்.

இவர் மட்டக்களப்பு மெதடிஸ் கல்லூரி மற்றும் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) இன் பழைய மாணவனுமாவார்.

கலைப்பட்டதாரியான இவர் அகில இலங்கை சமாதான நீதவான் என்பதுடன் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் சமூக செவையாளர்;; என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.