சித்திலெப்பை ஆய்வு மன்றம் 2017 மார்ச் மாதத்தில் நடாத்தத் திட்டமிட்டுள்ள முழுநாள் ஆய்வரங்கினை முன்னிட்டு தேசிய ரீதியில் ஆய்வுக் கட்டுரைப் போட்டியொன்றினை நடாத்தத் திட்டமிட்டுள்ளது. இப்போட்டியில் பங்குகொள்ள விரும்புபவர்கள் கீழ்வரும் தலைப்புகளில் ஒன்றில் தங்களது ஆய்வுக் கட்டுரைகளினை எழுதியனுப்பலாம். கட்டுரைகள் ஆய்வுக்கண்ணோட்டத்துடன் அமைந்ததாக இருத்தல் முக்கியமானதாகும்.
தலைப்புகள்:
1. அறிஞர் சித்திலெப்பையும் முஸ்லிம் தனியார் சட்டமும்.
2. அறிஞர் சித்திலெப்பையின் சமூகவியல்.
3. அறிஞர் சித்திலெப்பையின் இஸ்லாமிய தத்துவஞானம்.
4. அறிஞர் சித்திலெப்பையின் அரசியல் பரிமாணம்.
5. இலங்கை முஸ்லீம்களை தனித்துவமான தேசிய இனமாக இனங்காட்டியதில் அறிஞர் சித்திலெப்பையின் பங்களிப்பு.
போட்டி விதிகள்:
1. இலங்கையைச் சேர்ந்த எவ்வினத்தவரும் போட்டியில் பங்குபற்றத் தகுதி உடையவராவர்.
2. போட்டியாளர் 25 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
3. ஆய்வுக் கட்டுரைகள் ஏ4 தாளில் 10 பக்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.
4. ஆய்வுக் கட்டுரைகள் பதிவுத்தபால் மூலம் அனுப்புவதோடு முழுப் பிரதியும் மின்னஞ்சல் மூலமாகவும் ளனைனடைநடிடிநசகளூபஅயடை.உழஅ எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
5. ஆய்வுக் கட்டுரைகள் 20-02-2017 ந் திகதிக்கு முன் கிடைக்கக்கூடியதாக (முன்னர் முடிவுத் திகதி 15-01-2017 என அறிவிக்கப்பட்டிருந்தது) பொதுச் செயலாளர், சித்திலெப்பை ஆய்வு மன்றம், இல. 414, காலி வீதி, கொழும்பு 6 ( General Secretary, Siddi Lebbe Research Forum, c/o Prince City Campus, 414, Galle Road, Colombo 6) எனும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும். கட்டுரைகளில் ஆக்கத்துக்கு உரியவரது பெயர் குறிப்பிடப்பட்டிருக்கக் கூடாது.
6. தகுதியற்ற கட்டுரைகள் போட்டிக்குச் சேர்த்துக் கொள்ளப் படமாட்டாது. போட்டிக் குழுவின் தீர்மானங்களும், நடுவர்களினது தீர்ப்பும் இறுதியானவை.
பரிசு விபரம்:
1. முதற் பரிசு: ரூபா 25,000 பணப்பரிசும், வெற்றிக் கேடயமும், சான்றிதழும்
2. இரண்டாம் பரிசு: ரூபா 15,000 பணப்பரிசும், வெற்றிக் கேடயமும், சான்றிதழும்
3. மூன்றாம் பரிசு: ரூபா 10,000 பணப்பரிசும், வெற்றிக் கேடயமும், சான்றிதழும்
4. தேர்ந்தெடுக்கப்படும் ஏனைய 5 கட்டுரைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுவதோடு ஆய்வுக் கோவையிலும் சேர்த்துக்கொள்ளப்படும்.

