இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்த கல்குடாத்தொகுதிக்கான NFGGயின் இலவச அப்பியாசக்கொப்பி விநியோக நிகழ்வுகள்.

Written By avathani Media Network on Tuesday, January 10, 2017

(NFGG ஊடகப்பிரிவு)
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG )யினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கான இலவச அப்பியாசக்கொப்பி விநியோக நிகழ்வுகளின் வரிசையில் கல்குடாத்தொகுதி மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பி விநியோக நிகழ்வு ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களை மையப்படுத்தி இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதலாவது நிகழ்வு கடந்த 08.01.17 ஞாயிறு அன்று பி.ப. 4.00 மணிக்கு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மண்டபத்திலும், இரண்டாம் கட்ட நிகழ்வு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய மண்டபத்தில் 09.01.17 திங்கள் பி.ப. 4.00 மணிக்கும் இடம்பெற்றது.

இவ்விரண்டு நிகழ்வுகளின் போதும் கல்குடா பிரதேத்தினைச் சேர்ந்த சுமார் 1000 முஸ்லிம, தமிழ் மாணவர்களுக்கு இலவச அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வுகளின் பிரதம அதிதியாக NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டு சிறப்புரைகளை ஆற்றினார். 

வாழைச்சேனையில் இடம்பெற்ற நிகழ்வினை சகோதரர் AJ அசீஸ் ஆசிரியர் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தியதுடன் Dr. MH முஸ்தபா, கோட்டக்கல்வி அதிகாரி MLA ஜுனைத் ஆகியோர் விசேட அதிதிகளக பங்கு பற்றினர். அதே போன்று வாழைச்சேனையில் இடம்பெற்ற நிகழ்வினை சகோதரர் AM உவைஸ் ஆசிரியர் தலைமை தாங்கி நடாத்தியதுடன் மூத்த இலக்கியவாதியும் சமூக ஆரவலருமான SLM ஹனிபா , Dr. MBM பிர்னாஸ், மற்றும் பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தின் உப அதிபர் MA.ஷாபிர் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விஷேட நிகழ்வுகளில் NFGGயின் கல்குடா பிரதேச செயற்குழு உறுப்பினர்களான S நழீம், MM அன்ஸார், AG அஷீஷ், NPM றிபாஷ், AJ மர்ஷூக், AM உவைஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் பெருமளவான பெற்றோர்கள் ஊர்ப்பிரமுகர்கள் மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.