(NFGG ஊடகப் பிரிவு)
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியி(NFGG)னால் முன்னெடுக்கப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கான இலவச அப்பியாசக்கொப்பிகள் விநியோக நிகழ்வின் தொடரில், காத்தான்குடி பாலமுனை பிரதேச மாணவர்களுக்கான வினியோகம் கடந்த 31.12.16 அன்று பிற்பகல் 3 மணிக்கு பாலமுனை அலிகார் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
NFGGயின் பாலமுனை பிரதேச செயற்குழுவின் இணைப்பாளர் AM சியாட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர்ரஹ்மான் , NFGG தலைமைத்தவ ஆலோசனை சபை உறுப்பினர்களான MACM ஜவாஹிர், AGM ஹாறூன் , MRM ஜவாத் (ஆசிரிய ஆலோசகர்) , MAM பைஷர், மற்றும் பாடசாலை அதிபர் அப்துர் ரஹ்மான், பாலமுனை பிரதேச பிரமுகர்களான அல்ஹாஜ் ABM இஸ்மாயில், AL. ஸலாஹ் லெப்பை , ULM றபாய்தீன் , SM.ஹஷீன், JM.அஷ்ரப் MM. றஹீம், மற்றும் பாலமுனை செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு பெற்றோர்களுக்கு அவசியமான பெறுமதியான ஆலோசனைகளை வழங்கும் வகையிலான விசேட உரையொன்றையும் ஆற்றினார்.
இந்நிகழ்வில் பாலமுனைக்கிராமத்தில் வசிக்கும் 675 குடும்பங்களை சேர்ந்த 1050 மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பி பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இவ்விஷேட நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் , NFGGயின் மகளிர் பிரிவு உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் பெருமளவான பெற்றோர்கள் ஊர்ப்பிரமுகர்கள் மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















