12வது சுனாமி நினைவு தினத்தில் 'கிழக்கு சுகாதார அபிவிருத்திப் பயணம்' நூல் வெளியீடும், நற்சேவையாளர்கள் கௌரவிப்பும்.

Written By avathani Media Network on Monday, January 2, 2017

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் ) 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அபிவிருத்தியை நோக்கிய பயணமும், அட்டாளைச்சேனை தளஆயூர்வேத வைத்தியசாலையில் 2016ம்ஆண்டில் நடைபெற்ற அபிவிருத்திகள் பற்றிய பதிவும் நூல் வெளியீடும், சுனாமி 12ம் வருட நினைவு தின நிகழ்வுகளும் நேற்று அட்டாளைச்சேனை தள ஆயூர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றன. 

அட்டாளைச்சேனை தள ஆயூர்வேத வைத்தியசாலை அத்தியேட்சகர் கே.எல்.நக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு, மற்றும் சமூகசேவைகள், மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மது நசீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான எம்.உஸ்.உதுமாலெவ்வை, மாகாண சபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீன், முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ஜே.உசைன்தீன், மாகாண சுகாதார உதவிப் பணிப்பாளர் பிர்னாஸ் இஸ்மாயில், மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் திருமதி.ஆர்.சிறிதர், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் யூ.எம்.வாஹிட் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கடந்த 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்தோருக்காக இரண்டு நிமிட மௌன அச்சலி செலுத்தப்பட்டதோடு, விசேட துஆப் பிராத்தனையும் இடம் பெற்றது.

அட்டாளைச்சேனை தள ஆயூர்வேத வைத்தியசாலைக்கான புதிய பெயர்ப் பலகை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் அவர்களினால் திரை நீக்கம் செய்யப்பட்டதோடு, கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் அவர்களினால் புதிய மின்பிறப்பாக்கிக்கான இணைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.இறுதியாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காகக் கடந்த காலங்களில் நற்பணி புரிந்த அனைவரும் பிரதம அதிதியினால் நினைவுச் சின்னங்கள், சான்றிதழ்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மாகாண சுகாதார அமைச்சர் நசீர் இங்கு கரத்துத் தெரிவிக்கையில்:- 'சுகாதார துறையானது உயிர்களைக் காப்பாற்றும் ஓர் உண்ணத துறையாகும். இதில் பணியாற்றுவோர் யாராக இருந்தாலும் கட்சி பேதங்கள், மத பேதங்களை மறந்து, மனிதாபிமானத்தோடும், இரக்க சுபாவத்தோடும் பணியாற்ற வேண்டும்' எனக் கெட்டுக் கொண்டார்.











Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.