அமெரிக்க அடாவடி

Written By avathani Media Network on Sunday, January 29, 2017


Mohamed Nizous

உலகப் பொலிஸ்காரன்
உள்வீட்டில் களவெடுக்கான்
பலகாலம் ரகசியமாய்
கலகங்கள் செய்தவன்
குழப்பத்தில் நேரடியாய்
குதித்து இருக்கின்றான்.

அரபு நாடுகளை
ஆள் போட்டு அடக்கியவன்
பிரபுகளைப் பிடித்து
பித்தலாட்டம் பண்ணியவன்
கரந்து அடிக்காமல்
காண அடிக்கின்றான்.

யாராட்சி வந்தாலும்
இரண்டில் ஒன்று வரும்
நேரடியாய் அடிப்பான்
நிழலாய் அடிப்பான்
மாறாது எதிரிகளின்
மன நிலை எப்போதும்.

நாடுகளைத் தடுத்தாலும்
நல்லவரை கெடுத்தாலும்
கேடி போல் பள்ளிகளை
மூடி அழித்தாலும்
வாடாது இம்மார்க்கம்
வளரும் வெட்ட வெட்ட.

ட்ரம்பின் அப்பனெல்லாம்
டம்மியாய்ப் போன கதை
ரொம்பக் கேட்டிருக்கம்
விம்மியதைப் பார்த்திருக்கம்
எம்பிக் குதிப்பவர்க்கு
இறைவன் பதில் தரட்டும்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.