ஜனாதிபதி பதவியேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு காத்தான்குடியில் சிரமதானம் மற்றும் துஆ பிரார்த்தனை

Written By avathani Media Network on Monday, January 9, 2017

(எம் எச் எம் அன்வர்)

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு இன்று புதிய காத்தான்குடி 167பி பிரிவில் சிரமதானம் மற்றும் துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்றன

கிராம உத்தியோகத்தர் சில்மியா அன்ஸார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மஸ்ஜிதுஸ் ஸலாம் பள்ளிவாயல் மற்றும் நூறானியா பள்ளிவாயல் மையவாடி சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதுடன் ஜனாதிபதியவர்களுக்கு ஆசி வேண்டி விஷேட துஆ பிரார்த்தனையினை அப்ரார் பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி எம் சி எம் அவ்பர்(பலாஹி) நிகழ்த்தினார்

மேற்படி பிரிவுக்கான திவிநெகும உத்தியோகத்தர் எம் எஸ் எம் அப்துல்லாஹ் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம் சுல்பிகார் உரை நிகழ்த்தினர் 
















Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.