(இக்பால் அலி)
இயற்கையின் சீற்றம் நாட்டு மக்களை பல்வேறு வடிவங்களில் வதைத்துக் கொண்டிருக்கிறது. கடுமையான வரட்சியின் காரணமாக ஆறு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறானதொரு கஷ்டமான சூழ்நிலையில் அல்லாஹ்வின் அரு;ட்கொடையான சுத்தமான குடி நீரை கெகுணுகொல்ல பிரதேசத்திலுள்ள அஸ்டா கல்வி நிலையத்தின் விடுதியில் கல்வி பயிலும் மாணவிகள் தண்ணீரைப் பெற்றுக் கொள்வதையிட்டு பெரும் மனமகிழ்ச்சியடைகின்றேன். இங்குள்ள மாணவிகள் எவ்வகையிலான சிரமங்களைமின்றி அவர்களது கல்விப் பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வேண்டும். என்பது எம்முடைய எதிர்பார்ப்பாகும் என்று தைபா கல்வி மற்றும் சமூக நல அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் அஷஷெய்க் எம். ஜே. ரிஸ்வான் மதனி தெரிவித்தார்.
தைபா கல்வி மற்றும் சமூக நல அபிவிருத்தி நிறுவனத்தினால் சவூதி அரேபியாவின தனவந்தரின் நன்கொடை நிதியினால் சுமார் 4 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட குழாய்க் கிணறு நீர் விநியோகத்தை திறந்து வைக்கும் வைபவம் 20-01-2017 அஷ்டா கல்வி நிறுவனத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்றது .அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தைபா கல்வி மற்றும் சமூக நல அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் அஷஷெய்க் எம். ஜே. ரிஸ்வான் மதனி இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
சில நாட்களாக தொடரும் கடுமையான வரட்சியினால் விவசாயிகள் பாரிய துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். பல பகுதிகளில் விவசாயத்தையே நம்பி வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுடைய பயிரிட்ட பயிர்கள் கருகி நிலமும் பாலைவனம் போல் காட்சியளிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து நிற்கிறார்கள். இந்தப் பயிர்ச் செய்கைக்காகப் பெற்ற கடனை எப்படி மீளச் செலுத்துவது என்ற நிர்க்கதியான நிலையில் உள்ளனர்
இந்தப் பிரதேசத்திலுள்ள குளங்கள் வற்றிக் காணப்படுவதால் அதிலுள்ள மீன்களை சிறுவர்கள் பிடித்து விளையாடுகின்றார்கள். இதனால் விவசாய நிலங்களுக்கும் நீரை எவ்வாறு பெற்றுக் கொள்வது என திண்டாடுகின்றார்கள். இவ்வாறு குடி நீருக்குத் தட்டுப்பாடு மரக்கறிகள் விலையேற்றம் நோய் பரவும் அபாயம் என்ற பல கஷ்ட நஷடங்களுடன் இன்று மக்கள் உள்ளனர். இதற்கான அரசாங்கம் முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றன.
நபி நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் வரட்சி ஏற்பட்டது வரட்சி என்பது எல்லா மக்களுக்குரிய சோதனையாகும். மனிதாபிமானச் செயற்பாடுகளிலும்; , நல்ல விடயங்களிலும். துஆப் பிரார்த்தனைகளிலும், மழை வேண்டி தொழும் விசேட தொழுகைளில் ஈடுபடுதல் வேண்டும். அல்லாஹ் நிலத்திற்கு அடியில் தேக்கி வைத்திருக்கின்றான் என்ற அடிப்படையில் அந்த தண்ணீரைப் பெற்றுக் கொடுக்க முயற்சிகள் செய்த வேண்டும். பொதுவாக எல்லா மக்களுக்கும் இது பயன்படும்.
இத்தகை சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எம்மாலான உதவிகளையும் ஒத்துழைப்புக்களை வழங்க அரசாங்கத்துடன் இணைந்து பொது நிறுவனங்கள் வசதி படைத்தவர்கள் உதவ முன்வருதல் வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
