மறைந்த ஸ்தாபகச் செயலாளர் கவின் கமல் நினைவரங்கில் 33 வது வகவ கவியரங்கு

Written By avathani Media Network on Thursday, January 19, 2017

கடந்த 12-01-2017 வியாழக் கிழமை வலம்புரி கவிதா வட்டத்தின் 33 வது வகவ கவியரங்கம் அண்மையில் மறைந்த வகவ ஸ்தாபகச் செயலாளர் கவின் கமல் இர்ஷாத் கமால்தீன் நினைவரங்கில் கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது. 

நினைவரங்கிற்கும் கவியரங்குக்கும் வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் தலைமை தாங்கினார்.

வகவம் இலங்கை கவியுலக வரலாற்றில் புகழீட்ட பெரும் காரணகர்த்தாவாகத் திகழ்ந்த ஸ்தாபகச் செயலாளர் கவின் கமல் புகழ் முழு நிகழ்விலும் ஒலித்தது. 

வகவ ஸ்தாபக உறுப்பினர்கள் தலைவர் டாக்டர் தாசிம் அகமது, சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி, கலைக்கமல் மற்றும் கலா விஸ்வநாதன், ஈழகணேஷ், இளநெஞ்சன் முர்ஷிதீன், மேமன்கவி, தமிழ்த்தென்றல் அலி அக்பர், எம். எஸ். எம். ஜின்னா, கே.எம். எம். நஸீர் ஆகியோர் கவின் கமல் குறித்த தமது மனப்பதிவுகளை முன் வைத்தனர். வகவத்திற்கு முற்பட்ட கவின் கமல் பற்றிய பணிகளும் இங்கு எடுத்துக் கூறப்பட்டன. 

“1949 ஜூலை மதம் 16ந் திகதி பிறந்த கவின் கமலின் தகப்பன் அப்துல் ரகுமான்  
தாய் பாத்தும்மா பீபி. ஒரு அண்ணன் ஒரு தம்பி. கொம்பனித்தெரு அல் இக்பால் மகா வித்தியாலயம் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் 

ஸாஹிராக் கல்லூரியில் படிப்பித்த ஆசிரியர் சிந்தகி ஹுசைன் அவர்களிடம் தமிழ் மொழி இலக்கணம் கற்றார். 1960 களில் தனது பதினோராவது வயதில் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தனது பாடசாலைப் பருவத்திலேயே மற்ற மாணவர்களையும் கலை இலக்கியத்துறையில் ஈடுபடவைக்கும் நன்னோக்கில் தனது நண்பர்களான எம்.எஸ்.எம்.ஜின்னா, நஜ்முல் ஹுசைன் ஆகியோருடன் இணைந்து உருவாக்கப்பட்ட “மதிவளர் மன்றம்” என்ற அமைப்பில் தலைவராக நியமிக்கப்பட்டார்.



1974 களில் ஈழமணி பத்திரிகையில் நந்தினி என்ற சிறுகதை எழுதி பத்திரிகை துறையில் கால்பதித்தார். பின்னர் இலங்கையின் அனைத்துப் பத்திரிகைகளிலும் கவின்கமல் எனும் புனை பெயரில் சிறுகதை நாவல் உருவகக்கதை கவிதை என இவரது ஆக்கங்கள் வெளிவந்தன
தமிழ் ஆங்கிலம் சிங்களம் உர்து ஹிந்தி ஆகிய மொழிகளை அறிந்து வைத்திருந்தார். தமிழில் கட்டுரைகள் எழுதும் ஆற்றல் உள்ளவராக இருந்தார் இலங்கை வானொலி முஸ்லிம் தமிழ் சேவைகளில் கலந்துகொண்டு நிகழ்சிகளுக்கு குரல்கொடுப்பவராக இருந்தார்

1978 களில் தனிக்கவிதைகள் உருவகக்கதைகள் தினகரனில் வெளிவந்தன ரமழான் சிந்தனைகளும் எழுதினார்.இலங்கையில் அனைத்துப்பத்திரிகைகளிலும் கவின் கமல் எனும் புனை பெயரில் சிறுகதை நாவல்உருவக்கதை கவிதை என இவரது பல ஆக்கங்கள் வெளிவரத்தொடங்கின 
1979 களில் தனிமை மினி நாவல் 8 அத்தியாயங்கள் தினகரனில் வெளிவந்தது. நீதிக்கதை எனும் தலைப்பில் குறுங்கதைகள் வெளிவந்தன 


1980 களில் கலைக்கமலுடன் சேர்ந்து கமல் பிரதர் பப்பிளிகேஷன் எனும் பெயரில் கமலம் சஞ்சிகை வெளிவந்தது அத்துடன் எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு வந்தார்


வாழ்ந்தது கொம்பனித்தெரு ஜாவா லேன். பின்னர் 1980 களில்கொம்பனித்தெரு சர்ச் வீதியில் தாஸிம் அகமதுடன் அவரது மருத்துவ நிலையத்தில் சந்திப்பு பின்னர் எஸ் .ஐ .நாகூர் கனியுடனான சந்திப்பு 

தாஸிம் அகமது கவின் கமல் நாகூர் கனி கலைக்கமல் டாக்டர் நூர்தீன் ஐவரும் சேர்ந்து 1981 நவம்பர் 20 வலம்புரி கவிதா வட்டம் ஸ்தாபிதம் ஸ்தாபகத் தலைவராக தாஸிம் அகமதும் ஸ்தாபகச் செயலாளராக கவின் கமலும் தெரிவுசெய்யப்பட்டனர் 


‘ஓடக்குழல்’, ‘வெள்ளையில் ஒரு புள்ளி’ ,’மழையில்லா மேகம்’, ‘பசிக்குள் பசி’, ‘புலராப் பொழுதுகள்’ ஆகிய கவிதை நூல்கள் கமல் பிரதர்ஸ் பப்பிளிகேஷனால் வெளியிட்டு வைக்கப்பட்டன கலைக்கமல் அப்போது புதுக்கடையில் வாழ்ந்து வந்தார் 1982 களில் மழையில்லா மேகம் புதுக்கவிதை காவியம் தப்ரபேன் ஹோட்டலில் வெளியிட்டு வைக்கப்பட்டது

கே .எஸ் .சிவகுமாரன் எம் எச் எம் ஷம்ஸ் தாஸிம் அகமது நாகூர் கனி ஆகியோர் மழையில்லா மேகம் தொடர்பான விமர்சனங்கள் எழுதினர். மழையில்லா மேகம் நெடுங்கவிதையின் சிறப்புக்கள்  
சீர்திருத்தத் தமிழில் முதன்முதலில் இலங்கையில் வெளியான நூல் 

கமின்கமல் கைகளினால் அச்சுக்கோர்க்கப்பட்டு அட்டைப்படம்
வடிவமைக்கப்பட்டு தனிமனித உழைப்பில் வெளியிடப்பட்ட நூல்
படிமக்குறியீடுகள் கொண்டு நகர்த்திச்செல்லப்படும் முதன்முதலில் 
வெளியான நெடுங்கவிதை காவியம். 
வகவப்பணிகளோடு நின்றுவிடாமல் தனது சர்வதா பதிப்பகத்தின்மூலம் நூல்கள் வெளியீடு. 1982 களில் ரூபவாஹினி எழுத்தோவியர் நியமனம் கிடைத்தது 
இ.ஓ .கூ .முஸ்லிம் சேவையில் ஊடுருவல் நிகழ்ச்சியில் நடிப்பு மற்றும் தயாரிப்பு 
அல் அஸூமத்துடன் இணைந்து பூபாளம் கவிதை சஞ்சிகை வெளியீடு 
23 .07 .1983 திருமணம். மனைவி புதுக்கடையை சேர்ந்த தூபத்துல் கரீமா
பிள்ளைகள் 2 பெண் 1 ஆண். ஆண்மகன் 02 .௦௧. 2012 ல் அகால மரணம் 
நகீதா ஷப்னம் இரண்டாவது மகளின் குடும்பத்துடன் கிராண்டபாசில் மரணிக்கும்வரை வாழ்ந்து வந்தார் 


2002 ல் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் விருதும் பொற்கிழியும் வழங்கி கௌரவிப்பு. 2003 ல் அஸீஸ் மன்றம் ‘கலைவாரிதி’ பட்டம் கொடுத்து கௌரவிப்பு 


2004 ல் ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் கவுன்சில் விருதும் பொற்கிழியும் வழங்கி கௌரவம் 

2005 ல் ‘அறிவியல் துறையில் முஸ்லிம் முன்னோடிகள்’ எனும் ஆய்வு நூல் எழுதி வெளியிட்டார். இந்நூல் தமிழ்நாடு கன்னிமாரா நூலகத்தில் உசாத்துணை நூலாக வைக்கப்பட்டுள்ளது 


2008 .09 .14 அன்று அவரது அன்பு மனைவி காலமானார்

2012 ல் தாஸிம் அகமதுவின் ‘கண் திறவாய்’ அறிமுக விழாவின்போது விருதும் பொற்கிழியும் அளித்து கௌரவம் 

27 .03 .2013 ல் வகவம் மீள் ஆரம்பத்தின்போது ஸ்தாபக உறுப்பினர்கள் ஐவர் கௌவரத்தின்போது கவின் கமல் பொற்கிழி கொடுத்து கௌரவிக்கப்பட்டார்

2016 ல் ‘இஸ்லாமிய கிலாபத் ஆட்சியாளர்கள்’ எனும் நூலை எழுதி வெளியிட்டார் இந்நூல் அமெரிக்கன் நூலகம் ஒன்றினால் கொள்வனவு செய்யப்பட்டது அதன்பின்னர் நோய்வாய்ப்பட்ட நிலையில் 2016 டிசம்பர் மாதம் 10 ம் திகதி காலமானார் “
மறைந்த ஸ்தாபகச் செயலாளர் கவின் கமல் பற்றிய இத்தகைய பயனுள்ள தகவல்கள் பேச்சாளர்களால் பரிமாறப்பட்டன.


கவியரங்கில் கவிஞர்கள் சுபாஷினி பிரணவன், தாஜ்மஹான், எம். பிரேம்ராஜ், வெலிமடை ஜஹாங்கீர், ஆஷிகா, ரவூப் ஹஸீர், எஸ். தனபாலன், பாணந்துறை எம். பி.எம். நிஸ்வான், ஏ. பீர் முகம்மது, க.லோகநாதன், எம்.வஸீர், எம். எஸ். அப்துல் லத்தீப், கம்மல்துறை இக்பால் கிண்ணியா அமீர் அலி, கலைவாதி கலீல், வெலிப்பன்னை அத்தாஸ், ஜொயெல் ஜோன்சன், ஏ.ஆர்.தீன் முஸம்மில், ஆதில் உணர்ச்சிப்பூக்கள் ஆகியோர் தங்களது விதவிதமான பார்வைகளால் கவியரங்கை கலகலப்பாக்கினர். கவின் கமல் நினைவாக அவர் எழுதிய ஒரு கவிதையினை கவிஞர்கள் இப்னு அஸூமத், பிரேம்ராஜ், மேமன் கவின் ஆகியோர் கவிதா நிகழ்வாக நிகழ்த்தினர்கள் 

மறைந்த ஸ்தாபக செயலாளர் கவின் கமல் அவர்களின் புதல்வி நாஹிதா சப்னம், அவரது மருமகன் இர்ஷாத் கான் உட்பட அஸீஸ் மன்றத் தலைவர் அஸ்ரப் அனீஸ், பிரபல நாடகாசிரியர் அஷ்ரப் கான், மஹ்தி ஹஸன் இப்ராஹிம், 'ஒளி அரசி' சஞ்சிகை ஆசிரியர் ஜனதன், த. மணி, ஐ.எஸ். நிஷாம் ஷெரீப், எம். எஸ். உதுமான், எஸ். எச். எம். இத்ரீஸ், அப்சராஸ் எம். ஹுசைன், ரி.என். இஸ்ரா, யோகராஜன் சுசீலா, எஸ். ஏ.கரீம், கே.பத்மநாதன், எம். எச். எம். நவ்ஸர், துவான், முல்லை முஸ்ரிபா போன்றோர் சபையை அலங்கரித்தனர்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.