(நிந்தவூர் - முஹம்மட் ஜெலீல்)
நிந்தவூர் பிரதேச செயலகம் நடாத்தும் பிரதேச கலை இலக்கிய விழா 16-01-2017
அ
ன்று நிந்தவூர் கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழா நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியானி.ஆர்.யு. அப்துல் ஜலீல் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கௌரவ. எம்.சி. பைசால் காசிம், பா.உ. சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர். அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு.
கௌரவ அதிதியாக கௌரவ ஆரீப் சம்சுதீன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அவர்களும். சிறப்பு அதிதிகளாக. ஜனாப் எம்.எம். அமீர், மேலதிக மாவட்ட செயலாளர் அம்பாரை, மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்களும் ஊர் பிரமுகர்களும், நிந்தவூர் இலக்கிய கலைஞர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாக பழங்கால பண்பாட்டு கலாச்சார கலை நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து பனிச்சை எனும் நூல் வெளியிடப்பட்டு கலை இலக்கிய கலைஞர்கள் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.
நிந்தவூர் -
முஹம்மட் ஜெலீல்






