NFGGயின் இலவச அப்பியாசக்கொப்பி விநியோக அங்குரார்ப்பன நிகழ்வு.

Written By avathani Media Network on Tuesday, December 27, 2016


(NFGG ஊடகப் பிரிவு)

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியி (NFGG) னால் முன்னெடுக்கப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கான இலவச அப்பியாசக்கொப்பிகள் விநியோக நிகழ்வு நேற்று (26.12 2016 திங்கள் ) பிற்பகல் 4 மணிக்கு NFGG காத்தான்குடி பிராந்தியக் காரியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

NFGG சிரேஷ்ட ஆலோசனை சபை உறுப்பினர் MACM ஜவாஹிர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் NFGGயின் தேசிய அமைப்பாளர் MBM பிர்தௌஸ் நளீமி மற்றும் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர்ரஹ்மான் , NFGGமகளிர் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இங்கு உரையாற்றிய NFGGயின் தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ் நளீமி அவர்கள், 'எமது பிரதேசத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களின் கல்விக்கான பங்களிப்பாக இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தினை கடந்த பல வருடங்களாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) முன்னெடுத்து வருகின்றது.. இந்நிகழ்ச்சித்திட்டமானது முற்றிலும் NFGGயின் சிரேஷ்ட உறுப்பினர்களின் பெருவாரியான சொந்த நிதிப்பங்களிப்புடனும் மற்றும் ஏனைய உறுப்பனர்கள் ஆதரவாளர்களின் நிதிப் பங்களிப்புடனேயே மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.

இருப்பினும் எமக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி நிலை காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இத்திட்டத்தினை நடை முறைப்படுத்த முடியாமல் போனது கவலைக்குரியது.

இவ்வேலைத் திட்டத்திற்கான தேவை சமூகத்தில் தொடர்ந்தும் உணரப்படுவதனால் இவ்வருடம் இதனை மீண்டும் அமுல்படுத்துவதென தீர்மானித்து அதற்கான வேலைத் திட்டங்களை நாம் இப்பொழுது தொடங்கியுள்ளோம்.

காத்தான்குடி உள்ளடங்கலாக மட்டக்களப்பு , திருகோணமலையின் பல பிரதேசங்களையும் சேர்ந்த முஸ்லிம், தமிழ் மாணவர்களை உள்ளக்கியதாக ஏறத்தாள 18000 ஆயிரம் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆரம்ப கட்டமாக இன்று ஆரம்பித்து வைக்கப்படும் இந்நிகழ்வானது தொடர்ச்சியாக பல நாட்களுக்கு பிரதேசம் முழுவதிலும் பரவலாக நடைபெறும்' எனத்தெரிவித்தார். 

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் அவர்களும் நிகழ்வின் இறுதியில் விஷேட உரையொன்றினை நிகழ்த்தினார். அத்தோடு, NFGG யின் சிரேஷ்ட உறுப்பினர்களான SMM பஷீர் ஆசிரியர், AGM ஹாறூன் , MYM ஷரீப், AC அஷ்ரப் அலி, முகமட் நஜ்மில், M ஜம்சீத், A.சைபுதீன், நஸீர் மௌலவி ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இன்றைய நிகழ்வில் முதற்கட்டமாக 200 பாடசாலை மாணவர்களுக்கு இலவச அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் இதில் பெருமளவிலான பெற்றோர்கள் NFGG சிரேஷ்ட உறுப்பினர்கள் மகளிர் அணி உறுப்பினர்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


















Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.