கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டை பொது மக்கள் பார்வையிடலாம்! Inbox x

Written By avathani Media Network on Thursday, December 22, 2016

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட நகல் பிரதிகளை பொது மக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார். 

இதன் பிரகாரம் இன்று வியாழக்கிழமை (22) தொடக்கம் எதிர்வரும் புதன்கிழமை (28) ஆம் திகதி வரை அலுவலக நேரங்களில் மாநகர சபையின் நிதி பிரிவில் இந்த வரவு- செலவுத் திட்ட நகல் பிரதிகளை பொது மக்கள் பார்வையிட முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


அத்துடன் இவ்வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்க விரும்புவோர் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை எழுத்து மூலம் சமர்ப்பிக்கலாம் எனவும் ஆணையாளர் தெரிவித்தார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.