வானொலி நிகழ்ச்சிகளும் நமது உம்மத்தும்..

Written By avathani Media Network on Monday, December 19, 2016

(ஜுனைட்.எம்.பஹ்த்)

இன்றைய கால கட்டத்தில் சினிமா, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தின் ஆதிக்கம் ஏனைய மத சகோதரர்களையும் விட நமது முஸ்லிம் உம்மத்துக்கள் மத்தியில் அதிகமாக செல்வாக்குச்செலுத்துவதை காணக்கூடியதாக இருக்கிறது.

வானொலி , தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாக சினிமா பாடல்களை விரும்பிக்கேட்டு சந்தோசமாக பாவம் செய்யும் உம்மத்து நமது உம்மத்துக்களே.!

நிகழ்ச்சியில் பாட்டுக்கேட்கும் பாத்திமாக்களின் நிலை சினிமா??
பட சீடிக்கடைகளில் வரிசையில் நிற்கும் முகம்மது, அஹமத்துகளின் ஈமானின் நிலை கேள்விகுறி..??

நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னால் எப்படி பதில் கூறுவார்கள்.. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்..

அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட படைத்தவன் விரும்பி சந்தோசப்படக்கூடிய தொழுகையை நிறை வேற்ற ஆர்வம் காட்டாத நமது உம்மத் அன்னியவர்களுடன் ஆனந்தமாக அரட்டை அடித்து ஆனந்தம் அடைந்து இஸ்லாத்திற்கு முற்றிலும் மாறுபட்ட சினிமா பாடல்களை கேட்டு மகிழ்வதில் அடையும் இவ்வுல சிற்றின்னம் நாளை மறுமையில் பாரிய கைசேதத்தை உண்டாக்கும் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்..

ஒரு சம்பவத்தை இவ்விடத்தில் பதிவிடுகிறேன்..

ஒரு வானொலி நிகழ்ச்சியிக்கு தொடர்பை ஏற்படுத்திய ஒரு முஸ்லிம் சகோதரர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கூறுகிறார் தனது கடையில் வியாபாரமாக இருந்தது இப்போது சற்று குறைந்து காணப்படுவதால் பாடல் கேட்க்க தொடர்பு கொண்டாராம்.. இவர் லுஹர் அஸர் தொழுதிருக்க வாய்ப்பு இல்லை (அல்லாஹ்வே அறிந்தவன்) இவரது ஈமானின் நிலை???

இன்னுமொரு சம்பவம்...

இரவு நேரம் சுமார் 12 மணிக்கு மேல் இருக்கும் நான் பேரூந்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது அப்பேருந்தில் ஒலித்துக்கொண்டிருந்த வானொலியில் பாட்டு கேட்டும் நிகழ்சி ஒரு அன்னிய சகோதரர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் .. அந் நிகழ்ச்சிக்கு நமது முஸ்லிம் பெயர் தாங்கிய ஒரு பாத்திமா தொடர்பு கொண்டு தனது கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் தனக்கு காதல் பாடல் தருமாறும் ஆசையாய் கேட்கிறார். பாடல் ஒலிக்கிறது..

சுபஹானல்லாஹ்.. இந்த சம்பவத்தை சிந்தியுங்கள்..
நடு இரவில் அன்னிய ஆணுடன் ஆசையாய் பேசி தனது முழு விபரத்தை கொடுத்துவிடுவதால் என்ன நடக்கும் என்ன நடக்கிறது இத் தொடர்பு வேறு வழிக்கு கொண்டு செல்லும் இறுதியில் இப்பெண் தனது வாழ்வை இழப்பதுமட்டுமல்ல புனிதமான நாம் உயிராக நேசிக்கும் இஸ்லாத்தையும் இழந்து பாரிய நஷ்டவாளியாக இரு உலகிலும் கைசேதப்படக்கூடிய நிலை.. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்..

சிந்திக்கக் கூடிய எனது உறவுகளே! இந்த கட்டுரை மூலமாக யாரையும் விமர்சிப்பது எனது நோக்கம் அல்ல.. நமது சமூகத்தில் ஏற்படுகின்ற சீரழிவுகள் தடுக்கப்பட வேண்டும் இதற்கு எம்மால் முடியுமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் இல்லாவிடில் நாளை மறுமையில் இவர்கள் செய்த பாவத்தை தடுக்காத குற்றத்தில் நானும் தண்டிக்கப்படுவொம் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்..
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.