இலவச உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு - 2016

Written By avathani Media Network on Sunday, December 18, 2016

இவ்வருடம் கா.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவ, மாணவிகளுக்கான இலவச உயர் கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவன மாணவர்கள் அமைப்புகளினால் எதிர்வரும் (24.12.2016) ஞாயிற்றுக்கிழமை பெண்களுக்கு மு.ப 8.30 மணிக்கும் ஆண்களுக்கு பி.ப 2.30 நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


அதாவது, 
உயர்தர பிரிவு பாடத்தெரிவை எவ்வாறு மேற்கொள்வது 
உயர்தரப் பரீட்சையை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பான ஆலோசணைகள். 
பல்கலைக்கழக மற்றும் ஏனைய நிறுவனங்களின் பாடநெறிகள் தொடர்பான அனுமதியை எவ்வாறு பெற்றுக்கொள்வது. 
பல்கலைக்கழகங்களில் அனைத்து துறைகளிலும் பயிலும் மாணவர்களை சந்தித்து தனிப்பட்ட ரீதியில் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள ஓர் அரிய சந்தர்ப்பம்.


சாதாரன தரப் பரீட்சையின் பின் தொடரக்கூடிய ஏனைய உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பான விபரங்கள். 
அனைத்து மாணவ சகோதர சகோதரிகளையும் உரிய நேரத்திற்கு சமூகளித்து பயன்பெறுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.


ஏற்பாடு

பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவன 
மாணவர்கள் அமைப்பு


முன் பதிவுகளுக்கு பெயர், பாடசாலை விபரங்களை 0752150566 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு SMS அனுப்பிவைக்கவும்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.