பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு கொழும்பில்

Written By avathani Media Network on Friday, December 30, 2016

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கொழும்பு டீ.எம்.டீ.ஐ அமைப்பும் மலேசியா டீ.டீ.ஏ அமைப்பும் இணைந்து கொழும்புபகுதி வசதி குறைந்த பிள்ளைகளுக்கான அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (30) மாலை நான்கு மணிக்கு கொழும்பு - 10 மருதானை போபஸ் வீதியில் உள்ள அமைப்பின் தலைமையகத்தில் நடைபெறும்.

அமைப்பின் தலைவர் டாக்டர் உலூமுத்தீன் அன்வர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வை கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத் தலைவரும் முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான ஏ. இஸட். எம். அஹ்மத் முனவ்வர் ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளிலிருந்து வசதி குறைந்த பிள்ளைகளுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.