முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான முன்மொழிவுக்கான கருத்தரங்கு- நாளை காத்தான்குடியில்

Written By avathani Media Network on Monday, December 26, 2016

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் - காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான முன்மொழிவுக்கான கருத்தரங்கு 24 நாளை சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன மகாநாட்டு மண்டத்தில் இடம்பெறவுள்ளது.

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.எம். தௌபீக் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி கருத்தரங்கில் அஷ்ஷெய்க் உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்சூர் , சட்டத்தரணி எம்.எம்.பஷீஜ்' சட்டத்தரணி எம்.ஏ.எம்.ஹகீம் ஆகியோர் கலந்து கொண்டு முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான பல்வேறு தலைப்புக்களில் விரிவுரைகளை நிகழ்த்தவுள்ளதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிச் செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.றமீஸ் ஜமாலி தெரிவித்தார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.