கல்முனை ஸாஹிரா 'செஸ்டோ' அமைப்பின் புதிய நிர்வாகிகள்!

Written By avathani Media Network on Wednesday, December 28, 2016

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் 1999' பழைய மாணவர் ஒன்றியமான செஸ்டோ அமைப்பின் வருடாந்த பொதுக் கூட்டம் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுத் தொகுதியில் நடைபெற்றபோது 2017ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவும் இடம்பெற்றது.

இதன்போது தலைவராக பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், செயலாளராக எம்.சி.எம்.சி.றிலா, பொருளாளராக ஏ.எச்.எம்.நளீம், பிரதி தலைவராக ஏ.எம்.எம்.றிபாஸ், பிரதி செயலாளராக எம்.சி.அப்துர் ரஹீம், ஊடக இணைப்பாளராக ஏ.எச்.எம்.றிஸான், கணக்காய்வாளராக ஏ.எம்.எம்.சிராஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் எம்.எச்.எம்.அலி ரஸா, எஸ்.எச்.எம்.அஸ்மி, ஏ.ஏ.ஐ.சப்லி அஹமத் ஆகியோர் நண்பர்கள் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களாகவும் என்.எம்.றிஸ்மீர், எஸ்.எம்.ஆரிஸ் அக்பர், எம்.பி.எம்.பௌசான் ஆகியோர் ஜனாஸா நலன்புரிக் குழு உறுப்பினர்களாகவும் எஸ்.எச்.எம்.அனஸ், யூ.எல்.எம்.சப்ரீன் ஆகியோர் வெளி நாடுகளுக்கான இணைப்பாளர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.