கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பனாகொடையில் உள்ள பயிற்சி மற்றும் வேலைத்தளத்தை பார்வையிட்டார்.

Written By avathani Media Network on Friday, November 18, 2016



லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அண்மையில் பனாகொடையில் உள்ள பயிற்சி மற்றும் வேலைத்தளத்தை பார்வையிட்டார்.


இவ்விஜயத்தில் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கெளதம் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.நிறுவாக ,நிதிப்பிரிவு ஊழியர்கள் ,அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.இவ்விஜயத்தின் போது வடக்கு ,கிழக்கு பகுதியில் வாழும் இளைுஞர், யுவதிகளுக்கு நிறுவனத்தின் ஊடாக எதிர்காலத்தில் பயற்சி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு பயிற்சி பெறுவர்களுக்கு NVQ 4 மற்றும் 5  

சான்றிதழ் வழங்கப்பட்டு ஆட்டே மொபைல் தொழில் துறையில் மேலும் முன்னேற சந்தர்ப்பம் வழங்கப்படும். இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொழிலும் வழங்கப்படும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியூதீனின் தூர நோக்கான சிந்தனை மூலம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில்

நிறுவனத்தின் கிளைகளை உருவாக்கி நல்ல தேர்ச்சி பெற்ற பயிற்றுவிக்கப்பட்ட பொறியிலாளர்களை உருவாக்குவது எங்களது அடுத்த இலக்கு எனவும் மேலதிக பயிற்சி வழங்குவதற்காக ஊழியர்கள் இந்தியாவிற்கு அனுப்பி பயிற்சி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.







Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.